இந்தியாவில் கட்டப்பட்டுள்ள எட்டு ஷாந்தி ஸ்தூபிகளில் இந்த விஷ்வ ஷாந்தி ஸ்தூபியும் ஒன்றாகும். இது கீதை மந்திர்’க்கு அருகிலேயே அமைந்துள்ளது. காந்திஜியால் ஃபுயூஜி குருஜி என்று அன்புடன் அழைக்கப்பட்ட குருவால் இது கட்டப்பட்டுள்ளது.
இந்த ஃபுயூஜி குருஜி ஜப்பானிலிருந்து 1935ம் ஆண்டு வார்தாவுக்கு வருகை தந்து காந்திஜியை சந்தித்து ஷாந்தி ஸ்தூபிகளை இந்தியாவில் நிறுவுவது குறித்து பேசியுள்ளார்.
இந்த விஷ்வ ஷாந்தி ஸ்தூபி புத்தமதப்பிரிவினரின் வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. பிரம்மாண்டமாக வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் இந்த ஸ்தூபியில் நான்கு திசைகளிலும் நோக்கியபடி புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தரின் வாழ்க்கை சரித்திரத்தை விளக்குவதற்காக இந்த ஸ்தூபி எழுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த ஸ்தூபிக்கு அருகிலேயே ஒரு சிறிய ஜப்பானிய புத்தக்கோயிலும் அதன் அருகில் சிறு பூங்காவுடன் அமைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications