சிப்ரா கிரே எனும் இந்த புகழ்பெற்ற பிக்னிக் சிற்றுலாத்தலம் மேகாலயா மாநிலத்தில் உள்ள மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அந்தூரியம் பிளாண்டேஷன் தோட்டத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் இந்த இடம் உள்ளது.
கங்கோல் ஆறு மற்றும் ரொன்கிராம் ஆறு ஆகிய இரண்டும் சிப்ரா கிரே ஸ்தலத்தில் ஒன்று சேர்ந்து சங்கமித்து ரொன்கிராம், கரோபதா மற்றும் மன்சச்சார் பகுதியை நோக்கி பாய்கிறது. பின்னர் இது பிரம்மபுத்திரா ஆற்றுடன் கலந்துவிடுகிறது.
இப்பகுதியில் ஆற்றில் உருவாகியுள்ள குழிவு போன்ற ஒரு இடம் நீச்சலுக்கு ஏற்ற இடமாகவும் அதை ஒட்டிய ஆற்றங்கரை பகுதி பிக்னிக் ஸ்தலமாகவும் பயன்படுகிறது.
இங்குள்ள உயரமான இடத்தில் ஒரு காட்சிதளமும் அமைந்துள்ளது. இருப்பினும் இந்த ஆற்றங்கரை பிக்னிக் ஸ்தலத்தில் குதூகலமாக குடும்பத்தினருடன் கழிப்பது பயணிகளால் விரும்பப்படுகிறது. துரா நகரத்திலிருந்து சுற்றுலாப்பேருந்து மூலம் இந்த சிப்ரா கிரே பிக்னிக் ஸ்தலத்துக்கு வரலாம்.



Click it and Unblock the Notifications