டரிபோக் கிரே எனும் இந்த சிறு கிராமம் நோக்ரக் தேசிய பூங்காவிலிருந்து 3 கி.மீ தொலைவில் மேற்கு கரோ மலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. விவசாயத்தொழிலில் இயந்திரங்களின் ஆதிக்கம் அதிமாகி விட்டதால் இங்குள்ள மக்கள் கிராம சுற்றுலா தொழில் மூலமாக வரும் வருமானத்தை நம்பியுள்ளனர்.
இப்பிரதேசத்தின் நாட்டுப்புற வாழ்க்கை முறை குறித்து சுற்றுலாப்பயணிகளுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு அடையாள கிராமமாக இந்த டரிபோக் கிரே பிரபல்யமடைந்துள்ளது.
நோக்ரேக் தேசிய பூங்கா மற்றும் நோக்ரேக் சிகரத்திற்கு வருகை தரும் பயணிகளை கவர்ந்திழுக்கும் நோக்கத்துடன் இந்த கிராமம் ஒரு நாட்டுப்புற சுற்றுலா கேந்திரமாக மாற்றப்பட்டிருக்கிறது. கிராம மக்கள் அனைவருமே இந்த சுற்றுலா செயல்பாடுகளில் பங்கேற்றுள்ளனர்.
இங்கு பயணிகள் 200 முதல் 400 ரூபாய் வரையான வாடகையில் ஒரு மரவீட்டையோ அல்லது குடிலையோ வாடகைக்கு அமர்த்திக்கொள்ளலாம்.
இந்த குடிசைகள் மிக எளிமையாகவும் அதே சமயம் மரத்தால் ஆன தரையுடன் கூடிய நவீன சுகாதார குளியலறை வசதிகளுடன் காணப்படுகின்றன. உள்ளூர் கரோ கலாச்சாரத்துக்குரிய எளிமையான உணவு வகைகள் இங்கு விருந்தினர்களுக்கு பரிமாறப்படுகின்றன.
டரிபோக் கிரே கிராம சுற்றுலாவின் போது அன்பான உபசரிப்பு மட்டுமல்லாமல் இயற்கை நடைபயணம், பறவை வேடிக்கை மற்றும் மலையேற்றம் போன்ற சுற்றுலா பொழுதுபோக்குகளிலும் பயணிகள் ஈடுபடலாம். துரா நகரத்திலிருந்து சுற்றுலா வாகனங்கள் மூலம் இந்த டரிபோக் கிரே கிராமத்திற்கு வரலாம்.



Click it and Unblock the Notifications