நோக்ரெக் பயோஸ்பியர் எனப்படும் இந்த தேசிய இயற்கை பூங்கா வளாகம் கூடாரத்தங்கல், பறவை வேடிக்கை போன்ற பொழுதுபோக்குகளுக்கு ஏற்றதாக உள்ளது. கரோ மலைகளில் உள்ள உயரமான சிகரமாகவும் இந்த நோக்ரெக் சிகரம் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் பலவகை உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் காணப்படுகின்றன.
அரிய வகை ஆர்க்கிட் மலர்த்தாவரங்களான ஒயிட் மெரன்டி, வைல்ட் லெமன், செம்பகா மற்றும் கிராண்ட் ரசமலா போன்றவை இந்த பூங்காவில் காணப்படுகின்றன. அருகி வரும் சில உயிரினங்களும் இங்கு வசிக்கின்றன.
ஹில்லாக் பபூன், பன்றி வால் குரங்கு, இமாலய கருங்கரடி, யானை மற்றும் ராட்சத பறக்கும் அணில் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
நோக்ரெக் பூங்காவிலிருந்து துரா நகரம் வரை செல்லும் காட்டு வழி நடைபாதை ஒன்று மலை ஏறிகள் மற்றும் சாகச விரும்பிகள் மத்தியில் பிரசித்தமாக உள்ளது.
பிரம்மபுத்திரா ஆற்றின் பின்னணியில் உயர்ந்தோங்கி நிற்கும் மலைகளின் அழகை இந்த பாதை நெடுகிலும் பார்த்து ரசிக்கலாம். ஷில்லாங் அல்லது துரா நகரத்திலிருந்து சுற்றுலாப்பேருந்து மூலம் இந்த நோக்ரெக் பயோஸ்பியர் தேசியப்பூங்காவிற்கு வந்தடையலாம்.



Click it and Unblock the Notifications