வோக்கா நகரத்துக்கென தனிப்பட்ட விமான நிலையம் கிடையாது. திமாப்பூர் விமான நிலையமே இங்கு செல்வதற்கான நுழைவு வாயிலாகத் திகழ்கிறது. சுமார் 162 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இவ்விமான நிலையம் டாக்ஸிகள் மற்றும் ஷட்டில் என்றழைக்கப்படும் சிற்றிடைப் போக்குவரத்து சேவைகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் கொல்கத்தா மற்றும் குவாஹத்தியிலிருந்து இந்நிலையத்துக்கு இயக்கப்படும் விமான சேவைகளை நீங்கள் உபயோகித்துக் கொள்ளலாம்.