பயணிகளைக் கவர்வதற்காக தொலைநோக்கி இல்லம் ஒன்று ஏலகிரியில் நிறுவப்பட்டுள்ளது. இது வனத் துறையினரால் பராமரிக்கப்படுகிறது. பொன்னேரியில் இருந்து ஏலகிரி செல்லும் வழியில் மலைப்பாதையின் நுழைவாயிலில், பதிமூன்றாவது வளைவுக்கு சற்று முன்பாக 1002 மீட்டர் உயரத்தில் இது அமைந்துள்ளது.
இந்த தொலைநோக்கி சமவெளிகளின் அழகிய தோற்றத்தைக் காட்டுகிறது. பயணிகள் பள்ளத்தாக்கின் அழகு, செங்குத்தான சரிவுகள், ஜோலார்பேட்டை சமவெளி மற்றும் வாணியம்பாடி ஆகியவற்றைக் காண வகை செய்கிறது. இந்த தொலைநோக்கி இல்லம் வார இறுதியிலும் திறந்திருக்க வேண்டும் என்றாலும் பொதுவாக இது பூட்டியே காணப்படுகிறது.



Click it and Unblock the Notifications