யூக்சோம் நகரம் நடைபயணம் செய்பவர்களின் சொர்க்கமாக திகழ்கிறது. பல வித நடைபயணங்களுக்கு இந்த இடமே மூலமாக விளங்குகிறது. இங்கிருந்து தஷிடிங்/கொயிசா லா அல்லது ட்சாங்ரி மலை உச்சிக்கி நடை பயணம் மேற்கொள்ளலாம்.
அதே போல் ஒரு நாளில் கச்சுபுரி ஏரிக்கும், இரண்டு மணி நேரத்தில் கஞ்செஞ்சுங்கா தேசிய பூங்காவிற்கும் நடை பயணம் செல்லலாம். யூக்சோமிலிருந்து கஞ்சன்சங்காவுக்கு ஒரு வார நடை பயணமும் சென்று வரலாம். இமயமலை மீது நடைபயணம் செல்பவர்களும் யூக்சோமிலிருந்து அதனை துவங்கலாம்.



Click it and Unblock the Notifications