Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மூணார் » ஈர்க்கும் இடங்கள் » மலையேற்றம்

மலையேற்றம், மூணார்

31

மூணார் சுற்றுலாத்தலத்துக்கு விஜயம் செய்யும் பயணிகளுக்காக காத்திருக்கும் சாகச பொழுதுபோக்குகளில் பிரதானமானது இந்த மலையேற்றமாகும். பல பாதுகாப்பான மலையேற்றப்பாதைகள் மூணார் பிரதேசத்தில் காணப்படுகின்றன.

இந்த பாதைகள் இந்த பிரதேசத்திற்குள்ளேயே உள்ள இதர இடங்களுக்கு இட்டுச்செல்கின்றன. ராஜமலா, இரவிகுளம் தேசிய பூங்கா மற்றும் நயம்காட் போன்ற இடங்களுக்கு செல்லும் மலையேற்ற ஒற்றையடிப்பாதைகள் வெகு பிரசித்தம்.

மலையேற்றம் மற்றும் சிகரம் ஏற்றம் போன்ற பொழுதுபோக்குகள் இயற்கையை அதனோடு ஒன்றி ரசிப்பதற்கான வாய்ப்பை பயணிகளுக்கு வழங்குகின்றன. மூணார் பிரதேசம் முழுக்கவும் பசுமைப்பள்ளத்தாக்குகள், ஓடைகள், புல்வெளிகள் மற்றும் சிறுகுன்றுகள் போன்றவை நிரம்பி காணப்படுவதோடு அதிக சிரமம் இல்லாத பொழுதுபோக்கு மலையேற்றத்தில் ஈடுபடுவதற்கு உகந்த சூழலும் இங்கு அமையப்பெற்றுள்ளது.

இங்குள்ள புல்வெளிப்பிரதேசங்களில் மலையேற்றத்தோடு சேர்ந்த கூடாரத்தங்கல் போன்ற இயற்கைச்சுற்றுலா பொழுதுபோக்குகளிலும் பயணிகள் ஈடுபடலாம்.

சுற்றுலா செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காகவே வனத்துறையின் சார்பாக மலையேற்ற பயணங்களும் இரவிகுளம் தேசிய பூங்காவின் உள்ளே ஏற்பாடு செய்து தரப்படுகின்றன.

சிகரம் ஏறுவதில் விருப்பம் உள்ளவர்கள் வனத்துறையின் முன் அனுமதி பெற்று தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான ஆனமுடி சிகரத்தில் ஏறலாம். மூணார் சுற்றுலாத்தலத்தை சுற்றிலும் ஏராளமான மலையேற்ற வாய்ப்புகள் பயணிகளுக்காகவும் சாகசப்பிரியர்களுக்காகவும் காத்திருக்கின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
12 Apr,Sun
Return On
13 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
12 Apr,Sun
Check Out
13 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
12 Apr,Sun
Return On
13 Apr,Mon