Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மைசூர் » ஈர்க்கும் இடங்கள் » மைசூர் அரண்மனை

மைசூர் அரண்மனை, மைசூர்

26

உண்மையில் மைசூர் அரண்மனை என்று இந்த பிரதான அரண்மனை தான் குறிப்பிடப்படுகிறது. அந்த அளவுக்கு பிரமாண்டமும் வரலாற்று பின்னணியும் கொண்டது இந்த அரண்மனை. இந்தோ சராசனிக், திராவிடம், ரோமன் மற்றும் ஓரியண்டல் போன்ற எல்லா கட்டிடக்கலை அம்சங்களும் கலந்து இந்த அரண்மனை உருவாக்கப்பட்டுள்ளது.

 

மூன்று அடுக்குகளை கொன்டு சாம்பல் நிற சலவைக் கற்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த அரண்மனையில் மூன்று இளம் சிவப்பு நிற குமிழ் கோபுரங்கள் காணப்படுகின்றன. அரண்மனையை ஒட்டி 44.2 மீட்டர் உயரத்துக்கு ஐந்து அடுக்குகளை கொன்ட தூண் கோபுரம் ஒன்றும் காணப்படுகிறது. இதன் மேற்பகுதியில் உள்ள அலங்கார கலசங்கள் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.சுற்றுலா பயணிகள் இந்த அரண்மனையில் கோம்பே தொட்டி அல்லது பொம்மை விதானம் என்ற வாசல் வழியாக நுழையலாம். இந்த விதானத்தில் 19 ம் நூற்றாண்டு மற்றும் 20 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பொம்மைகள் காணப்படுகின்றன.

அது தவிர இங்கு மரத்தால் ஆன ஒரு யானை சிலை 81 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு காணப்படுகிறது. கோம்பே தொட்டி வாயில் முன்புறத்தில் 7 பீரங்கிகளை பார்க்கலாம். தசரா திருவிழா துவங்கும்போதும் முடியும் போதும் இந்த பீரங்கிகள் முழங்கி விழாவினை கௌரவப்படுத்துகின்றன. தசரா திருவிழாவின் போது இந்த அரண்மனையில் உள்ள தங்க அரியாசனம் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.சுற்றுலாப்பயணிகள் இந்த அரண்மனையில் அரச உடைகள் வைக்கப்பட்டுள்ள அறை, அரச ஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் ஓவியக்காட்சி அறை போன்றவற்றை எந்த வித தடங்கலும் இன்றி மிக அருகில் பார்த்து மகிழலாம்.

இந்த அரண்மனையின் சுவர்களை பிரபல இந்திய ஓவியர்களான சித்தலிங்க சுவாமி, ராஜா ரவி வர்மா மற்றும் கே. வெங்கடப்பா போன்றோரின் ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருபதாம் நூற்றாண்டு வரை பல புதிய அமைப்புகள் சேர்க்கப்பட்டுள்ள இந்த அரண்மனையின் உள்ளே  வெவ்வேறு கட்டிடக்கலை மாதிரியை பின்பற்றி கட்டப்பட்டுள்ள14 கோயில்கள் காணப்படுகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
21 Mar,Sat
Return On
22 Mar,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
21 Mar,Sat
Check Out
22 Mar,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
21 Mar,Sat
Return On
22 Mar,Sun