Search
  • Follow NativePlanet
Share
» »வித விதமா ரக ரகமா சுவையான பதார்த்தங்கள் சாப்பிடணுமா! இத படிங்க

வித விதமா ரக ரகமா சுவையான பதார்த்தங்கள் சாப்பிடணுமா! இத படிங்க

வித விதமா ரக ரகமா சுவையான பதார்த்தங்கள் சாப்பிடணுமா! இத படிங்க

By Staff

நம்ம தமிழ்நாட்டுல எந்த ஊருக்கு போனாலும் அந்ததந்த ஊர்களுடைய ஸ்பெஷல் உணவுகளை சாப்பிடாம வரவே கூடாது. கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்த்திலுமே அதற்கென பிரத்யேகமான சுவையுடைய உணவு வகைகள் இருக்கின்றன. அந்த மாதிரியான உணவுகள் எல்லாமே அந்த ஊர்களில் விளையக்கூடிய தானியங்களை கொண்டே சமைக்கப்பட்ட ஆரோக்கிய உணவுகளாக இருப்பது சிறப்பாகும். வாருங்கள் மதுரை, கோயம்பத்தூர், காரைக்குடி என அதிசுவையான உணவுகள் கிடைக்கும் இடங்களுக்கு ஒரு உணவுச்சுற்றுலா செல்வோம்.

காரைக்குடி - செட்டிநாடு ஸ்பெஷல்:

காரைக்குடி - செட்டிநாடு ஸ்பெஷல்:

'செட்டிநாடு' இந்த பெயரை கேட்டவுடனேயே நம்மில் பலருக்கு வாயில் எச்சில் ஊரும். அந்த அளவுக்கு ஒரேஒரு முறை சாப்பிட்டால் கூட செட்டிநாட்டு சாப்பாட்டின் ருசிக்கு நம் நாக்கு அடிமையாகிவிடும்.

மதுரையை அடுத்து அமைந்திருக்கும் சிவகங்கை, காரைக்குடி தேவகோட்டை ஆகிய பகுதிகள் செட்டிநாட்டின் கீழ் வருகின்றன.

Photo: Flickr

காரைக்குடி - செட்டிநாடு ஸ்பெஷல்:

காரைக்குடி - செட்டிநாடு ஸ்பெஷல்:

இந்த பகுதிகளில் தொன்றுதொட்டு வழக்கத்தில் இருக்கும் செட்டிநாட்டு சமையல் முறைப்படி உணவு தயாரிக்கும் ஹோட்டல்கள் நிறைய இருக்கின்றன. அங்கு சென்று அச்சுஅசலான சுவையான செட்டிநாட்டு உணவுகளை ருசி பார்க்கலாம்.

காரைக்குடி - செட்டிநாடு ஸ்பெஷல்:

காரைக்குடி - செட்டிநாடு ஸ்பெஷல்:

பர்மா, சிலோன் போன்ற நாடுகளில் பெரும் வாணிபம் செய்த நாட்டுக்கோட்டை செட்டியார்கள் வாழ்ந்த நூற்றுக்கும் மேற்ப்பட்ட அறைகள் கொண்ட ஒரு தெரு நீளத்திற்கு கட்டப்பட்டிருக்கும் அரண்மனைகளை நாம் இன்றும் பார்க்கலாம். பர்மா தேக்குகளாலும், இத்தாலிய மார்பில்கலளாலும் கட்டப்பட்ட வீடுகள் அவை.

Photo:Natesh Ramasamy

காரைக்குடி - செட்டிநாடு ஸ்பெஷல்:

காரைக்குடி - செட்டிநாடு ஸ்பெஷல்:

செட்டிநாட்டு உணவுகளில் மிகவும் சுவையான உணவுகளாக கருதப்படுபவை நாட்டுக்கோழி குழம்பும், மீன் வருவலும் தான். கைகளால் தயாரான மசாலாவை கொண்டு செய்யப்படும் போதே இவை தங்களுக்குரிய தனித்துவமான ருசியை பெறுகின்றன. இவை தவிர சுவையான அடை தோசை வகைகள், தேன்குழல் போன்ற பல சுவையான உணவுகளும் இருக்கின்றன.

காரைக்குடி - செட்டிநாடு ஸ்பெஷல்:

காரைக்குடி - செட்டிநாடு ஸ்பெஷல்:

எப்படி அடைவது?

மதுரை நகரில் இருந்து காரைக்குடி 86 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. ஒன்றரை மணிநேர பயணத்தில் நாம் மதுரையில் இருந்து காரைக்குடியை அடைந்து விட முடியும். காரைக்குடியில் செட்டிநாட்டு உணவை ருசித்து ரசித்து சாப்பிட்டு விட்டு அப்படியே செட்டிநாட்டின் மற்றொரு முக்கிய நகரமான புதுக்கோட்டைக்கும் சென்று வாருங்கள். காரைக்குடியில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

Photo: Flickr

மதுரை - அல்லி நகரத்தில் மல்லி இட்லி:

மதுரை - அல்லி நகரத்தில் மல்லி இட்லி:

மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோயிலை அடுத்து எல்லோருக்கும் ஞாபகம் வரும் ஒரு விஷயம் அங்கு கிடைக்கும் மணமணக்கும் உணவுகள் தான். ஆவி பறக்கும் மல்லி இட்லியும், கோழிக் குழம்பும் பரோட்டாவும், ஜிகிர்தண்டாவும் எத்தனை முறை வேண்டுமானாலும்
சாப்பிடலாம்.

photo:Ranjith shenoy R

மதுரை - அல்லி நகரத்தில் மல்லி இட்லி:

மதுரை - அல்லி நகரத்தில் மல்லி இட்லி:

மல்லி இட்லி:

உலகத்தில் மக்கள் சாப்பிடும் மிகச்சிறந்த காலை உணவு எது என்று அறிவியலாளர்கள் ஆராய்ச்சி செய்கையில் அவர்கள் தென் இந்தியாவில் மக்கள் சாப்பிடும் இட்லி தான் மிக சிறந்த காலை உணவு என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இட்லி மதுரையில் வேறெங்கும் கிடைக்காத மெதுமெதுப்புடன்கிடைக்கிறது.

மதுரை - அல்லி நகரத்தில் மல்லி இட்லி:

மதுரை - அல்லி நகரத்தில் மல்லி இட்லி:

ஜிகிர்தண்டா:

'குளிர்ந்த இதயம்' என பெயர் பொருள்படும் ஜிகிர்தண்டா மதுரை ஸ்பெஷல் உணவுகளில் முக்கியமானது. பால், பாதாம் பருப்பு, வெண்ணிலா ஐஸ்கிரீம் போன்றவை கொண்டு தயாரிக்கப்படும் ஜிகிர்தண்டாவை அருந்தும் போது அது அப்படியே சென்று நம் இதயத்தை குளிர்விப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

மதுரை - அல்லி நகரத்தில் மல்லி இட்லி:

மதுரை - அல்லி நகரத்தில் மல்லி இட்லி:

மதுரையின் சுற்றுலாத்தலங்கள்:

மேலே சொன்ன வகை வகையான உணவுகளை எல்லாம் ருசிபார்த்த கையோடு மதுரையில் இருக்கும் முக்கிய சுற்றுலாத்தலங்களான மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மஹால், அழகர் கோயில், காந்தி அருங்காட்சியகம் போன்றவற்றிக்கு சென்று சுற்றிப்பார்க்கவும் தவறாதீர்கள்.

மதுரை - அல்லி நகரத்தில் மல்லி இட்லி:

மதுரை - அல்லி நகரத்தில் மல்லி இட்லி:

எப்படி செல்வது?

மதுரைக்கு நாட்டின் எல்லா முக்கிய நகரங்களில் இருந்தும் ரயில் வசதிகள் உண்டு. அதேபோல தமிழ்நாட்டின் எல்லா நகரங்களில் இருந்தும் மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மதுரையை எப்படி அடைவது என்பது பற்றிய மேலதிக தகவல்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

மதுரையில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்கள் இங்கே.

கோயம்பத்தூர் - இது கொங்குநாடு :

கோயம்பத்தூர் - இது கொங்குநாடு :

கொஞ்சும் தமிழ் பேசும் கொங்கு நாட்டில் சமைக்கப்படும் சில பிரத்யேகமான உணவு வகைகள் நீங்கள் வேறெந்த இடத்திலும்
கேள்விப்படாத ஒன்றாக இருக்கும். வானம் பார்த்த பூமியான கோவையில் வறட்சியையும் தாக்குப்பிடித்து வளரும் பயிர்களான கம்பு, ராகி, கொள்ளு போன்றவையே அங்குள்ள உணவுகளில் பிரதான இடம் பெறுகின்றன.

Photo:Faheem9333

கோயம்பத்தூர் - இது கொங்குநாடு :

கோயம்பத்தூர் - இது கொங்குநாடு :

'கோயம்பத்தூர் பிரியாணி' என இதை சொல்லலாம். அரிசி, துவரம் பருப்பு போன்றவை கொண்டு கூட்டாஞ்சோறு போல சமைக்கப்படும் இதை நெய் ஊற்றி சாப்பிடும் போது அவ்வளவு ருசியாக இருக்கும். கோவையில் உள்ள கிராமப்புறங்களில் தினசரி உணவாகவே இது சமைக்கப்படுகிறது.

ஹோட்டல்களில் இது கிடைப்பதில்லை. தவிர ஒப்பிட்டு, கம்பு சோறு போன்ற பல்வேறு கிராமிய உணவுகளை கோவையில் ருசிக்கலாம்.

கோயம்பத்தூர் - இது கொங்குநாடு :

கோயம்பத்தூர் - இது கொங்குநாடு :

கோயம்பத்தூரில் இருக்கும் சுற்றுலாத்தலங்கள்:

கோயம்பத்தூர் நகரம் எழில் மிகுந்த மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ அமைந்திருக்கிறது. இதன் காரணமாக இங்கு பல அருமையான இயற்கை காணிடங்கள் மற்றும் ஆன்மீக ஸ்தலங்கள் அமைந்திருக்கின்றன.

Photo:Dhruvaraj S

கோயம்பத்தூர் - இது கொங்குநாடு :

கோயம்பத்தூர் - இது கொங்குநாடு :

மருதமலை:

மருதமலையை தெரியாவதர்கள் தமிழ்நாட்டில் யாரும் இருக்கமாட்டார்கள் என்றே சொல்லலாம். இந்த கோயில் முன்பு கொங்கு கவுண்டர்களின் தனிச் சொத்தாக இருந்தது. இது முருகனின் அறுபடைவீடு ஆலயங்களுக்கு பிறகு அடுத்த முக்கியத்துவத்தை பெறுகிறது. எனவே முருக பக்தர்கள் மருதமலை கோயிலை முருகனின் 7-வது படைவீடு என்று நம்புகின்றனர். 1200 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் மருதமலை கோயில் கோயம்புத்தூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பதோடு சாலை வழியாக எளிதில் அடையக்கூடியதாக இருக்கிறது.

கோயம்பத்தூர் - இது கொங்குநாடு :

கோயம்பத்தூர் - இது கொங்குநாடு :

கோவை குற்றாலம்:

உலகின் 2-வது சுவையான நீராக கருதப்படும் சிறுவாணி ஆற்றுநீர் அருவியாக கொட்டும் இடம்தான் கோவை குற்றாலம். இதன் பெயருக்கு ஏற்றார் போலவே கோவையின் குற்றாலமாக திகழ்ந்து வரும் இந்த அருவி கோயம்புத்தூரில் இருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு வனத்துறையின் சிறப்பு அனுமதி பெற்ற பிறகே செல்ல முடியும். மேலும் கோயம்புத்தூரின் மற்ற பகுதிகளிலிருந்து இங்கு வர குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளே உள்ளன. அதுமட்டுமல்லாமல் 5 மணிக்கு மேல் இங்கு செல்ல யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

Photo:Ramana

கோயம்பத்தூர் - இது கொங்குநாடு :

கோயம்பத்தூர் - இது கொங்குநாடு :

பரூக் பீல்ட்ஸ் மால்:

கோயம்புத்தூர் மாநகரில் இளைஞகர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும் இடங்களில் ஒன்று புரூக்பீல்ட்ஸ் மால். 2009-ல் புரூக்பாண்ட் சாலையில் திறக்கப்பட்ட இந்த வணிக வளாகம் நகரிலேயே அதிகம் பேர் வந்து செல்லும் வளாகமாக அறியப்படுகிறது. இங்கு 6 திரைகள் கொண்ட மல்டிப்ளெக்ஸ் திரையரங்கு ஒன்றும், உள்ளூர் மற்றும் காண்டினெண்டல் உணவு வகைகளை பரிமாறும் உணவகம் ஒன்றும் அமைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் பெரியவர் ஒருசேர விளையாடும் விளையாட்டு மண்டலம் ஒன்றும் இந்த வளாகத்தில் உள்ளது.

Photo:Faheem9333

கோயம்பத்தூர் - இது கொங்குநாடு :

கோயம்பத்தூர் - இது கொங்குநாடு :

கோவையை எப்படி அடைவது?

கோயம்பத்தூரை எப்படி அடைவது என்பது பற்றிய விரிவான விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

கோயம்பத்தூரில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

 வேலூர் ஸ்பெஷல் - ஆம்பூர் பிரியாணி:

வேலூர் ஸ்பெஷல் - ஆம்பூர் பிரியாணி:

வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஆம்பூரில் தயாராகும் பிரியாணி உலகம் முழுக்க பிரபலமாகும். சிக்கன், மட்டன், பீப் மற்றும் மீன் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு அசைவ உணவாகவே இது பரிமாறப்படுகிறது. இந்த பிரியாணி உருவானதன் பின்னணியில் சுவாரஸ்யமான கதை ஒன்றும் உள்ளது. அது அடுத்த பக்கத்தில்.

 வேலூர் ஸ்பெஷல் - ஆம்பூர் பிரியாணி:

வேலூர் ஸ்பெஷல் - ஆம்பூர் பிரியாணி:

ஆற்காடு நவாப் காலத்தில் அவரின் படையில் லட்சம் வீரர்களுக்கு மேலாக இருந்திருக்கின்றனர். அவர்களுக்கு உணவாக தினமும் ரொட்டி தயாரிக்க அதிக நேரமானதால் அதனை ஈடுகட்ட முகலாய உணவான பிரியாணியை சமைத்து பரிமாற்ற ஆரம்பித்துள்ளனர்.

Photo:a_b_normal123

சென்னை பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை:

சென்னை பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை:

சென்னை - பெங்களுரு நெடுஞ்சாலையில் ஆம்பூர் அமைந்திருப்பதால் சாலை மார்கமாக ஆம்புரை கடக்கும் அனைவரும் இந்த ஆம்பூர் 'தம் பிரியாணியை' ருசிக்க மறப்பதில்லை. நீங்களும் சென்னை நோக்கி சென்னை பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணிக்கையில் நிச்சயம் ஆம்பூர் பிரியாணியை சாப்பிட்டு மகிழுங்கள்.

Photo:Nagesh Kamath

சுற்றுலாத்தலங்கள்:

சுற்றுலாத்தலங்கள்:

ஆம்பூர் நகரம் அமைந்திருக்கும் வேலுரில் சில நல்ல சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம் நடைபெற்ற வேலூர் கோட்டை, வேலூர் தங்க கோயில், ஜலகண்டேஸ்வரர் கோயில் போன்றவை ஆம்புருக்கு அருகில் இருக்கும் சுற்றுலாத்தலங்கள் ஆகும்.

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா:

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா:

திருநெல்வேலி நகரத்தின் சாகாவரம் பெற்ற அடையாளங்களில் முக்கியமானது இருட்டுக்கடை ஹல்வா. நெல்லையப்பர் கோயிலை ஒட்டியே அமைந்திருக்கும் இருட்டுக்கடையில் செய்யப்படும் ஹல்வா உலகப்புகழ் பெற்றதாகும். தாமிரபரணி ஆற்றின் தண்ணீரும் ஒரு வகை சாம்பா நெல்லுமே இதன் தனித்துவமான சுவையின் காரணங்களாக சொல்லபடுகிறது. மாலை நேரத்திற்கு பிறகே இங்கு வழக்கமாக விற்பனை துவங்குகிறது. திருநெல்வேலி வரும் எவரும் இங்கு வராமல் போவதில்லை என்று சொல்லும் அளவு இந்த ஹல்வாவின் சுவை அனைவரையும் சுண்டி இழுக்கிறது.

Photo: Flickr

உங்க ஊரில் என்ன ஸ்பெஷல்?

உங்க ஊரில் என்ன ஸ்பெஷல்?

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது வெகு சில உணவுகளே. உங்கள் ஊரிலும் இது போன்று தனித்துவமான உணவு உங்கள்
இருக்குமானால் அதை 'Comment' பகுதியில் பதிவிடுங்கள். மற்றுமொரு கட்டுரையில் அவற்றை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

காயல்பட்டினம் அடை

காயல்பட்டினம் அடை

காயல்பட்டினம் எனும் பகுதி தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள கடலோர நகரங்களில் ஒன்றாகும். தென்மாவட்டங்களில் இது மிகவும் பெயர் பெற்றது. இங்கு செய்யப்படும் அடை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். காயல்பட்டினம் அடை என்றே இதற்கு அடைமொழி போட்டு அழைக்கும் அளவிற்கு இது மிகவும் சிறப்பானது.

தூத்துக்குடி மக்ரூன்

தூத்துக்குடி மக்ரூன்


இது போன்றே தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரபலமானது மக்ரூன் எனப்படும் இனிப்பு. இது பொதுமக்களால் அதிகம் விரும்பப்படுவது. வெள்ளை நிறத்தில் பிஸ்கட் போன்று இனிப்பாக இருக்கும் இது கோன் ஐஸ்கிரீமீன் கோன் சிகரத்தின் வடிவத்தை மட்டும் வெட்டி எடுத்தார்போல இருக்கும். இது தூத்துக்குடி மக்களிடையே மிகவும் பிரபலமாகும்.

தூத்துக்குடியில் காணவேண்டிய சுற்றுலாத் தளங்கள் பற்றி தெரிந்துகொள்ள சொடுக்குங்கள்<br />தூத்துக்குடியில் காணவேண்டிய சுற்றுலாத் தளங்கள் பற்றி தெரிந்துகொள்ள சொடுக்குங்கள்

மதுரை ஜிகர்தண்டா

மதுரை ஜிகர்தண்டா


ஜிகர்தண்டா என்றவும் மதுரைதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு இதன் பெருமை உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. எத்தனையோ குளிர் பானங்கள் இருந்தாலும் இதுபோன்ற ஒரு உணவு உடலுக்கும் மனதுக்கு குளிர்ச்சியைத் தரவல்லது. மதுரையில் பெரும்பான்மையான கடைகளில் ஜிகர்தண்டா கிடைத்தாலும் நல்ல கடைகளைத் தேடி அருந்த வேண்டும். இல்லை என்றால் ஏமாற்றப்படலாம். நல்ல சுவையுடன் கூடிய ஜிகர்தண்டா எங்கே கிடைக்கும் என அந்தந்த பகுதியில் கேட்டாலே சொல்லிவிடுவார்கள்.

மதுரை சுற்றுலாத் தளங்கள் பற்றி தெரிந்துகொள்ள சொடுக்குங்கள்.

KARTY JazZ

தேனி பருத்திப்பால்

தேனி பருத்திப்பால்

மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் பரவலாக அனைத்து கடைத் தெருக்களிலும் எளிதில் கிடைக்கும் உணவு இது. பச்சரிசி மாவு, பருத்தி விதை, கருப்பட்டி, ஏலக்காய், சுக்கு, தேங்காய் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்பட்ட இந்த இனிப்பு நாவில் பட்டதும் ஒரு சிலிர்ப்பும், தொண்டைக்குள் இறங்கும்போது கதகதப்பும் வரும் பாருங்கள். அத்தனை சுவையும் ஒன்றாய் சேர்ந்ததுபோல ஒரு சுவை. ஒரு கப் பருத்திப் பால் சாப்பிட்டு பாருங்கள் அப்போது தெரியும் அதன் அருமை...

pandeeswaran

ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா

ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா

ஆண்டாள் வாழ்ந்ததாக நம்பப்படும் இந்த பூமியில் அதிக அளவு மாடுகள் வளர்க்கப்பட்டு வந்ததால், இங்கு பால் உற்பத்தி அதிகரித்து பால் பொருள்களும் கிடைக்க ஆரம்பித்தன. அந்தவகையில் இங்கு பால்கோவா மிகவும் பிரபலமாகிவிட்டது. ஸ்ரீவில்லிப்புத்தூர் போனீங்கன்னா இல்ல நண்பர்கள் யாரும் போனாங்கன்னா மறக்காம பால்கோவா வாங்கிடுங்க. மற்ற இடங்கள்ல கிடைக்குறதவிட இந்த பால்கோவாவுக்கு சுவை அதிகம்.

Shanze1

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X