Search
  • Follow NativePlanet
Share
» »கொல்லிமலை - இயற்கையின் செல்லக்குழந்தை!!!

கொல்லிமலை - இயற்கையின் செல்லக்குழந்தை!!!

By Super Admin

இயற்கையை கொன்றொழித்த இடங்களுக்கு மத்தியில் இயற்கையின் பொக்கிஷ மலைப்பிரதேசமாய் இன்று நம்மிடையே உள்ளது கொல்லிமலை.

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொல்லிமலை 1000 முதல் 1300 மீ உயரம் கொண்டது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், இன்றும் கொல்லி மலை இயற்கை எழிலுடனே காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

எனினும் இயற்கை சூழலில் நெடுந்தூரம் நடப்பதில் ஆர்வமுள்ளோர், மலையேற்றத்தில் ஆர்வமுள்ளோர் மற்றும் இயற்கை ஆர்வலர்களால் கொல்லிமலை தொடர்ந்து பார்க்கப்பட்டே வருகிறது.

படித்துப் பாருங்கள் : மூணார் - காதல் தேசத்தில் ஒரு உலா!!!

பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்

ஆதிகாலத்திலிருந்தே கொல்லிமலை, எட்டுக்கை அம்மன் என்று அழைக்கப்படும் கொல்லிப்பாவை அம்மனால் பாதுகாக்கப்பட்டு வருவதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே இம்மலை கொல்லிமலை என்று வழங்கப்படுகிறது.

படம் : Rajeshodayanchal

வரலாறு

வரலாறு

கிபி 200-ல் கொல்லிமலை பகுதியை வல்வில் ஓரி என்ற மன்னன் ஆண்டு வந்தான் . அவன் ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றியைக் கொன்றதாக புலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். மேலும் இராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப்பிரதேசம் கொல்லிமலையாக இருக்கக்கூடும் என்றும் சிலர் கருதுவதுண்டு.

படம் : Docku

சுற்றுலாத்தலங்கள்

சுற்றுலாத்தலங்கள்

ஆகாய கங்கை அருவி, அறப்பளீஸ்வரர் கோயில், வாசலூர்பட்டி படகுத் துறை, மாசிலா அருவி ஆகிய இடங்கள் கொல்லிமலையின் முக்கியமான சுற்றுலாத்தலங்களாக அறியப்படுகின்றன.

படம் : Portvp
http://commons.wikimedia.org/wiki/File:Kollimalai_Kundrugal.JPG

ஆகாய கங்கை

ஆகாய கங்கை

கொல்லிமலையில் பாயும் அய்யாறு நதி சுமார் 300 அடி உயரத்தில் இருந்து விழுவதை ஆகாய கங்கை அருவி என அழைக்கிறார்கள். அறப்பளீஸ்வரர் கோயிலின் அருகே அமைந்துள்ள இந்தக் கோயில் சுற்றிலும் மலைகள் சூழ எழிலுடன் காட்சியளிக்கிறது. கோயிலிலிருந்து தொடங்கும் படிகள் அருவியின் முடிவு வரை நீள்கிறது. மொத்தம் ஆயிரம் எண்ணிக்கையில் இருக்கும் படிகளின் உயரம் சற்றே அதிகமாக இருப்பதால் இப்படிகளில் ஏறுவதும், இறங்குவதும் சோர்வு தரும் ஒன்றாகும்.

படம் : Karthickbala

அறப்பளீஸ்வரர் கோயில்

அறப்பளீஸ்வரர் கோயில்

சதுரகிரி எனும் மலை உச்சியில் அமைந்துள்ள அறப்பளீஸ்வரர் கோயில் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக நம்பப்படுகிறது. இங்குள்ள ஈசன் 'அறப்பளி மகாதேவன்', 'அறப்பளி உடையார்' என்ற பெயர்களாளும் அழைக்கப்படுகிறார். இந்த அறப்பளீஸ்வரர் அய்யாற்றிலுள்ள சிறிய மீனின் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இக்கோயில் 'மீன் கோயில்' என்றும் அறியப்படுகிறது.

படம் : Karthickbala

வாசலூர்பட்டி படகுத்துறை

வாசலூர்பட்டி படகுத்துறை

கொல்லிமலையில் உள்ள வாசலூர்பட்டி படகுத்துறை தமிழ்நாடு சுற்றுலாத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. நீங்கள் கொல்லிமலை வரும்போது இங்கு படகுச் சவாரியில் ஈடுபட மறந்துவிடாதீர்கள்.

படம் : Karthickbala

மாசிலா அருவி

மாசிலா அருவி

ஆகாய கங்கை போல மிகப்பெரிய அருவி இல்லையென்றாலும், சுமார் 200 அடி உயரத்தில் இருந்து விழும் மாசிலா அருவி மிகவும் எழிலான தோற்றம் கொண்டது. மாசிலா அருவியின் முடிவில் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக மேம்பட்ட வாகனநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இங்கே நிறுத்தப்படும் வாகனங்களுக்கு தலா ரூபாய் 10 வசூலிக்கப்படுகிறது. மேலும் அருவியின் உச்சியில் அமைந்திருக்கும் மாசி பெரியசாமி கோயிலில் இருந்து பார்க்கும் போது தெரியும் பச்சை பசேல் என்ற இயற்கைச் சூழல் நம்மை வேறு உலகத்திற்கு கொண்டுசென்றுவிடும்.

வல்வில் ஓரி பண்டிகை

வல்வில் ஓரி பண்டிகை

கொல்லிமலையில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரியின் நினைவாக விமரிசயாக பண்டிகை ஒன்று கொண்டாடப்படுகிறது. எண்ணற்ற கலாச்சார நிகழ்ச்சிகள் நிறைந்த இந்தப் பண்டிகை ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

கொண்டை ஊசி வளைவுகள்

கொண்டை ஊசி வளைவுகள்

'எழில்மிகு கொல்லிமலை உம்மை இனிதே வரவேற்கிறது' என்ற வாசகத்துடன் காணப்படும் இந்த தோரணவாயிலிலிருந்து கொண்டை ஊசி வளைவுகள் தொடங்குகின்றன.

படம் : Rajeshodayanchal

கொல்லிமலை பள்ளத்தாக்கு

கொல்லிமலை பள்ளத்தாக்கு

கொல்லிமலையின் தலைசுற்றவைக்கும் பள்ளத்தாக்கு.

படம் : Dilli2040

பேளுக்குறிச்சியிலிருந்து...

பேளுக்குறிச்சியிலிருந்து...

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியிலிருந்து கொல்லிமலையின் தோற்றம்.

படம் : Karthickbala

சுற்றுலாப் பயணிகள்

சுற்றுலாப் பயணிகள்

ஆகாய கங்கை அருவியை நோக்கிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள்.

படம் : Rajeshodayanchal

கொல்லிமலை சந்தை

கொல்லிமலை சந்தை

கொல்லிமலை சந்தையில் பொருட்கள் வங்கிச் செல்வதற்காக வெகு தொலைவிலிருந்தெல்லாம் மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு கிடைக்கும் கிழங்குவகைகள், நிலக்கடலை, காய்கறிகள், தேன், பழங்கள் முதலிய பொருட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

படம் : Rajeshodayanchal

கொல்லிமலையும், சமவெளியும்!

கொல்லிமலையும், சமவெளியும்!

கொல்லிமலையையும், அதற்கு கீழுள்ள சமவெளியையும் தெளிவாக காட்டும் புகைப்படம்.

படம் : Kurumban

பலாப்பழமும், அன்னாசியும்!

பலாப்பழமும், அன்னாசியும்!

கொல்லிமலை சந்தையில் விற்பனைக்காக காத்திருக்கும் பலாப்பழங்களும், அன்னாசிப் பழங்களும்!

படம் : Rajeshodayanchal

காடுகளும், குன்றுகளும்!

காடுகளும், குன்றுகளும்!

கொல்லிமலையின் அடர்த்தியான காடுகளும், கடினமான குன்றுகளும்!

படம் : Rajeshodayanchal

சிறு சந்நிதி

சிறு சந்நிதி

அறப்பளீஸ்வரர் கோயிலினுள் அமைந்திருக்கும் சிறு சந்நிதி.

படம் : Rajeshodayanchal

தவழ்ந்து செல்லும் மேகங்கள்

தவழ்ந்து செல்லும் மேகங்கள்

கொல்லிமலையின் மீது தவழ்ந்து செல்லும் மேகங்கள்.

படம் : Karthickbala

கொல்லிமலைக்கு எப்போது, எப்படி செல்வது?

கொல்லிமலைக்கு எப்போது, எப்படி செல்வது?

கொல்லிமலையை எப்படி அடைவது

கொல்லிமலைக்கு எப்போது செல்லலாம்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X