கேரளாவின் தொன்மையான ஆலயங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் பந்தளம் மஹாதேவா கோயில், அடூர் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அச்சன்கோயில் ஆற்றங்கரையோரத்தில் எழிலே உருவாய் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.
பந்தளம் மஹாதேவா கோயிலில் அதன் முதன்மை தெய்வமான சிவபெருமானை தவிர விநாயகர், மாய எக்ஷி அம்மன், சுவாமி ஐயப்பன், நாகராஜர், சுப்பிரமணியன், பிரம்ம ரக்ஷர்கள் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகளையும் நீங்கள் பார்க்கலாம்.
இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கெட்டுக்காழச்சா எனும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்தோடு கலந்து கொள்கின்றனர்.
அதோடு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 10 நாட்கள் வெகு விமரிசையாக் நடத்தப்படும் திருவிழாவும் இந்தப் பகுதியில் மிகவும் பிரபலம். இந்த திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, 'ஆராட்டு' எனும் சடங்கு நிகழ்ச்சியுடன் இனிதே நிறைவுபெறும்.



Click it and Unblock the Notifications