Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அடூர் » ஈர்க்கும் இடங்கள் » செயின்ட் ஜார்ஜ் ஆர்தோடக்ஸ் தேவாலயம்

செயின்ட் ஜார்ஜ் ஆர்தோடக்ஸ் தேவாலயம், அடூர்

24

அடூர் நகரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சந்தனபள்ளி கிரமாத்தில் செயின்ட் ஜார்ஜ் ஆர்தோடக்ஸ் தேவாலாயம் அமைந்திருக்கிறது. இந்த தேவாலயம் இங்கிலாந்தை சேர்ந்த அருட்தந்தை செயின்ட் ஜார்ஜின் நினைவாக அவருடைய பெயரிலேயே செயின்ட் ஜார்ஜ் ஆர்தோடக்ஸ் தேவாலாயம் என்று அழைக்கப்படுகிறது.

இது 1810-ஆம் ஆண்டு கட்டப்பட்டாலும் அதன் பிறகு பல முறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேவாலயம் தென்னிந்தியாவின் மிகப்பெரிய தேவாலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

செயின்ட் ஜார்ஜ் ஆர்தோடக்ஸ் தேவாலாயம் கடைசியாக புதுபிக்கப்பட்டபோது இந்தோ-சாராசீனிக் சிற்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதோடு இந்து, இஸ்லாமியம் மற்றும் கிறிஸ்தவ கட்டிடக் கலை பாணிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த தேவாலயம் ஒரு கட்டிக்கலை அற்புதம் என்றே சொல்லலாம்.

அதுமட்டுமல்லாமல் காத்திக் பாணி கோபுரமும், பெர்சியன் பாணி கூரை வடிவமைப்புகளும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் அம்சங்கள். மேலும் சமீபத்தில் இது புதுபிக்கப்பட்டபோது, ரோம் நாட்டிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ் பெசிலிக்கா தேவாலயத்தின் பாதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவைதவிர தேவதூதர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்ட கல் சிலுவை பக்தர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலம்.இந்த தேவாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் செம்புடுப்பு எனும் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Jul,Sat
Return On
12 Jul,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Jul,Sat
Check Out
12 Jul,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Jul,Sat
Return On
12 Jul,Sun