வரலாற்று சிறப்பு வாய்ந்த ஜோகிகுண்டி அருவி அகும்பேவிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. முக்கால்வாசி தூரத்தை வாகனங்கள் மூலமாகவும் மீதி தூரத்தை நடை வழியாகவும் சென்றடைய வேண்டும்.
சிறு குளத்திலிருந்து தொடங்கும் ஜோகிகுண்டி அருவி பின்பு பள்ளத்தாக்கை கடக்கும் போது துங்க நதியுடன் இணைகிறது. பல ஆண்டுகளாக நீர் ஓடிக் கொண்டிருப்பதால் உண்டான 50 அடி நீள குகைகளில் ஜோகிகுண்டி அருவி பாய்ந்து செல்கிறது. பழங்காலத்தில் இங்குள்ள குகைகளில் ஜோகிகள்(ரிஷிகள்) அமர்ந்து தவம் செய்ததால் இதற்கு ஜோகிகுண்டி அருவி என்று பெயர் வந்தது.



Click it and Unblock the Notifications