அல்ச்சி கிராமத்தில் அமைந்துள்ள அல்ச்சி மடம் லடாக்கில் உள்ள ஒரு பழமையான மடம். இதனை அல்ச்சி சோஸ்கோர் அல்லது அல்ச்சி கொம்பா என்றும் அழைப்பர். இந்த மடம் இண்டஸ் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
புத்த சமஸ்கிருதத்தை திபெடனுக்கு மாற்றும் மொழி பெயர்ப்பாளரான ரின்சென் சங்போவால் 958-1055 கி.பி. யில் கட்டப்பட்டது தான் இந்த மடம் என்று நம்பப்படுகிறது. இந்த மடத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இது தட்டையான நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
இந்த மடத்தின் கட்டிடத்திற்குள் மூன்று முக்கிய கோவில்கள் உள்ளன. அவைகள் டு-காங், சும்-செக் மற்றும் மஞ்சுஸ்ரீ கோவில். இது 12 அல்லது 13-ஆம் நூற்றாண்டுக்கு முன் கட்டிய மடம் என்று வரலாறு கூறுகிறது.
லோட்சபா ல-காங் அல்லது மொழிப்பெயர்ப்பாளரின் கோவில் மற்றும் ல-காங் சோமா ஆகிய இரண்டு கோவில்களும் மடத்தின் உள்ளே இருக்கும் இரண்டு முக்கிய கோவில்கள். மடத்தின் வாசலில் இருக்கும் சோர்டென்ஸ் அல்லது ஸ்தூபாஸ் என்ற முக்கியமான அமைப்பு இங்குள்ளது. லிகிற் மடத்தின் துறவிகள் தான் இந்த கொம்பாவையும் இப்போது பார்த்துக் கொள்கிறார்கள்.
இந்த மடத்தில் புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது. இந்த இடத்தில் இன்னும் மின் வசதி இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் கையில் விளக்கு அல்லது டார்ச்சை கொண்டு செல்ல வேண்டும்.



Click it and Unblock the Notifications