இந்த கொலாபா கோட்டையை மும்பையிலுள்ள கொலாபா மார்க்கெட்டோடு சேர்த்து பயணிகள் குழம்பவேண்டாம். அது வேறு இது வேறு. அலிபாக் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இந்தக் கோட்டை மராத்தா மாவீரர் சிவாஜி மஹாராஜாவால் அவரது இறுதிக்காலத்தில் கட்டப்பட்டதாகும்.
ஒரு காலத்தில் இந்த கொலாபா கோட்டையில் (அல்லது கெளலாபா கோட்டை) ஒரு இனிப்பு நீர் கிணறு இருந்துள்ளது. இந்த கோட்டைக்கு அருகிலேயே பல கோயில்களும் அமைந்துள்ளன.
யானை, புலி போன்ற விலங்குகளின் உருவங்கள் இந்த கோட்டை வாயிற்கதவில் பொறிக்கப்பட்டுள்ளன.மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய பழமையைக் கொண்ட இந்தக் கோட்டையை அலை இறக்கம் உள்ள நாட்களில் அலிபாக் கடற்கரையிலிருந்து நடந்தே சென்று பார்க்கலாம்.இந்த கோட்டைக்குள் செல்ல இந்திய தொல்பொருள் துறை நுழைவுக் கட்டணம் வசூலிக்கின்றது.



Click it and Unblock the Notifications