Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஆலப்புழா » ஈர்க்கும் இடங்கள் » அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில்

அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில், ஆலப்புழா

77

அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில் என்று அழைக்கப்படும் இந்த புராதனமான கோயிலானது, செம்பகச்சேரி பூராடம் திருநாள் – தீவநாராயணன் தம்புரான் எனும் ராஜாவால் 790ம் ஆண்டிலேயே கட்டப்பட்டுள்ளது.

இக்கோயிலின் மூலவரான பார்த்தசாரதி பஹவான் ஒரு கையில் சாட்டையுடனும் மறு கையில் சங்குடனும் ருத்ர கோலத்தில் காட்சியளிக்கின்றார். மற்ற கோயில்களில் உள்ள எல்லா விஷ்ணு அவதாரங்களும் சங்கு ஏந்திய கோலத்தில் காணப்பட்டாலும், சாட்டையுடன் காட்சியளிக்கும் விஷ்ணு அவதாரத்தை அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயிலில் மட்டுமே தரிசிக்க முடியும்.

மேலும், புகழ் பெற்ற குருவாயூரப்பன் கோயிலுடன் நெருங்கிய தொடர்பை இக்கோயில் கொண்டுள்ளது. இங்கு நைவேத்தியமாக படைக்கப்படும் பால் பாயசத்தை ஏற்றுக்கொள்ள குருவாயூரப்பன் தினமும் இக்கோயிலுக்கு விஜயம் செய்வதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.

இக்கோயிலில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்தில் ஒவ்வொரு வருடமும் அம்பலப்புழா கோயில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆராட்டு திருவிழா என்ற மற்றொரு திருவிழாவும் இங்கு அனுஷ்டிக்கப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Jul,Fri
Return On
01 Aug,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Jul,Fri
Check Out
01 Aug,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Jul,Fri
Return On
01 Aug,Sat