Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஆலப்புழா » ஈர்க்கும் இடங்கள் » ‘ஆலெப்பி’ பீச்

‘ஆலெப்பி’ பீச், ஆலப்புழா

77

வேறு எந்த கடற்கரை நகரத்திலும் பார்க்க முடியாத ரம்மியமான கடற்கரை இந்த ‘ஆலெப்பி’ பீச் எனப்படும் கடற்கரையாகும். நகர மையத்திலேயே உள்ள இந்த கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து 1கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளது. ஒரு புறம் பரந்து விரிந்த அரபிக்கடலும், மறுபுறம் வரிசையாக காட்சியளிக்கும் பனை மரங்களுமாக கண்கொள்ளா அழகுடன் இந்த கடற்கரை நீண்டு கிடக்கிறது.

குடும்பத்தாரோ, துணையோ, நட்போ உங்கள் அருகிருக்க, அஸ்தமன சூரிய ஒளியில் மின்னும் கடல் நீரை ரசித்தபடியே இங்கு ஒரு மாலை நேரத்தை கழிக்கும் அனுபவத்துக்கு ஈடு இணை எதுவுமில்லை.

இந்த கடற்கரைக்கு அருகிலேயே உள்ள இன்னும் இரண்டு சுற்றுலா அம்சங்களையும் பயணிகள் மறக்காமல் பார்ப்பது நல்லது. படகு மூலம் இங்கிருந்து கொஞ்ச தூரத்திலேயே உள்ள தீவுப்பூங்காவுக்கு விஜயம் செய்து ரசிப்பதுடன் அங்குள்ள ஒரு பழைய கலங்கரை விளக்கத்திலும் ஏறி உச்சியிலிருந்து கீழே காட்சியளிக்கும் இயற்கை எழிலை ரசித்து மகிழலாம்.

இதற்கு ஒரு சிறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்சமயம் ஒரு சிறு சுற்றுலா அம்சமாக அறியப்பட்டாலும் ஒரு காலத்தில் இந்த கலங்கரை விளக்கமானது பரபரப்பான ‘ஆலப்புழா’ துறைமுக நகரத்தின் பிரதான அம்சமாக திகழ்ந்திருக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Aug,Thu
Check Out
21 Aug,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri