Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஆலப்புழா » ஈர்க்கும் இடங்கள் » கேரளாவின் படகு இல்லங்கள்

கேரளாவின் படகு இல்லங்கள், ஆலப்புழா

77

கேரளாவின் எழில் சிந்தும் உப்பங்கழிகளில் படகு இல்லங்களில் பயணம் செய்வதும், சிறிது காலம் அவைகளினுள்ளே வசிப்பதும் மிகவும் அற்புதமான அனுபவம். கேரளாவின் தனிமைபடுத்தப்பட்ட சில கிராமங்களிலிருந்து நகர்ப் பகுதிகளை அடைவதற்கு 'கெட்டுவல்லம்' என்று அழைக்கப்படும் இந்த படகு இல்லங்கள்தான் முந்தைய காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன.

அதன் பிறகு படகுப் பிரயாணம் செல்லும் ஆர்வத்தில் இங்கு பயணிகள் வரத் தொடங்கினர். இதன் காரணமாக இன்று படகு இல்லங்கள் கேரள சுற்றுலாத் துறைக்கு பெரும் வருமானம் ஈட்டித் தந்து கொண்டிருக்கிறது.

எனவே நீங்கள் கேரள மாநிலத்துக்கு சுற்றுலா வரும் போது ஆலப்புழா நகரத்தோடு, கொல்லம், குமரகம், பூவார் போன்ற மற்ற கேரள நகரங்களிலும் படகு இல்லங்களில் பயணம் செய்யலாம். கேரளாவின் பசுமையை உப்பங்கழி நீர்ப்பரப்பின் பின்னணியில் ரசித்து கொண்டே, உங்கள் வீடுகளில் இருப்பதை போன்ற ஒரு உணர்வை தரும் இந்த படகு இல்லங்களில் கிடைக்கும் அனுபவம் ஒரு உயர்ரக ரிசார்ட்டுகளில் கூட உங்களுக்கு கிடைக்காது.

இந்த படகு இல்லங்கள் பல்வேறு வடிவங்களுடனும், வெவ்வேறு வசதிகளுடனும் காணப்படுகின்றன. எனவே உங்களுடைய பட்ஜெட்டுக்கு தகுந்தார் போல உங்களால் படகு இல்லங்களை தேர்வு செய்து கொள்ள முடியும்.

இங்கு பொதுவாக சுண்டன், வெப்பு வல்லம், இருட்டுகுட்டி, சுருலன் போன்ற படகு இல்லங்களை நீங்கள் பார்க்கலாம். அதோடு ரெயின்போ குரூசஸ், ரிவர் எஸ்கேப்ஸ், தி லேக்ஸ் அண்ட் லகூன்ஸ், தி ரிவர் அண்ட் கண்ட்ரி, தி டிரீம் போட்ஸ் உள்ளிட்ட படகு இல்ல அமைப்புகள் இங்கு செயல்பட்டு வருகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Jun,Sat
Return On
21 Jun,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Jun,Sat
Check Out
21 Jun,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Jun,Sat
Return On
21 Jun,Sun