அல்மோராவிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலம்தான் பிரைட் கார்னர். இங்கு பனி மூடிய சிகரங்களுக்கு பின்னால் மனதைக் கவரும் அழகுடைய சூரிய உதயத்தையும், அஸ்தமத்தையும் காணலாம்.
நிலவு உதிக்கும் அழகை அமைதியாக அனுபவிக்க இது சிறந்த இடம். இந்த ரம்மியமான அனுபவங்களை வாழ்நாளில் ஒருமுறையேனும் அனுபவிக்க வேண்டும்.
பிரைட்டன் பிரபு நினைவாக இவ்விடத்திற்கு இப்பெயர் வந்தது, அதோடு இவ்விடம் மால் சாலையின் தொடக்கமாகவும் உள்ளது. இதன் அருகில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணர் குடில் ஆசிரமம் புகழ்பெற்ற தியான மையம்.
தியானத்தில் ஆர்வம் உள்ளவர்கள் ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் வரையும் மற்றும் செப்டம்பர் மாதத்திலிருந்து நவம்பர் வரை சென்றால் தியானத்தின் அற்புத அனுபவத்தை பெறலாம்.
விவேகானந்தா நூலகம் மற்றும் விவேகானந்தா நினைவகம் ஆகியவை அருகில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள். சுவாமி விவேகானந்தர் இமயமலை செல்லும் போது இங்கு தங்கி விட்டு சென்றார் எனபதற்கான பதிவுகள் இங்கு உள்ளன.



Click it and Unblock the Notifications