அல்மோராவில் புகழ்மிக்க கோவில் நந்தா கோவில். இந்து மதத்தின் முக்கியத் தலமான இக்கோவில் குமாவோன் பகுதியின் கட்டிடக்கலையை எடுத்துரைக்கும் பிரசித்திப்பெற்ற கோவிலாக மட்டுமல்லாமல் 1000 வருடங்கள் பழமையானதும் கூட.
சந்த் வம்சத்தை ரட்சிக்கும் பெண்கடவுளுக்கு அர்பணிக்கப்பட்ட இக்கோவில் அமலகா கல்லாலான மணிமுடியாள் அலங்கரிக்கப்பட்டும் மரத்தாலான கூரையால் சூழப்பட்டும் காட்ச்சியளிக்கின்றது.
இக்கோவிலின் மதில் சுவர்களில் பலவித கல்லாலான கலைவண்ணத்தை காணலாம். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தில் இங்கு நடத்தப்படும் நந்தா தேவி கண்காட்சி அதிகளவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடியது.