Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அல்மோரா » ஈர்க்கும் இடங்கள் » பின்சரின் வனவிலங்கு சரணாலயம்

பின்சரின் வனவிலங்கு சரணாலயம், அல்மோரா

20

பின்சரின் வனவிலங்கு சரணாலயம் அல்மோராவிலிருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு முக்கிய சுற்றுலாத் தலம். 45.59 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ளடக்கிய இச்சரணாலயம்  900 இருந்து  2500 மீ அளவில் கடல் மட்டத்திற்கு மேலே உள்ளது.

இவ்விடம் சிறுத்தை, பெரிய கொம்புகள் கொண்ட காட்டு மான், சீதல் மான், கஸ்தூரி மான், அடர்ந்த ரோமங்கள் கொண்ட மான், காட்டுப் பூனை, காட்டுப் பன்றி, கருப்புக் கரடி, பைன் கீரி, நரி, கருங் குரங்கு, குரங்கு, முள்ளம்பன்றி, பறக்கும் அணில், மற்றும் குரைக்கும் மான் போன்ற விலங்குகளுக்கு இயற்கையான வசிப்பிடமாக இருக்கிறது.

200-க்கும் மேற்பட்ட  பறவைகள் இங்குள்ளன. இச்சரணாலயத்தை முக்கிய பறவைகள் வாழ்விடமாக, சர்வதேச பறவைகள் வாழ்வு அமைப்பு  அறிவித்துள்ளது.

வால்குத்தி பறவை, கொட்டைகளை உண்டுவாழும் பறவைகள், கருப்புப் பறவைகள், நீண்ட வாலுடைய கிலிவகை பறவை, சிரித்துப் பாடும் பறவை, குண்டு கரிச்சான், மற்றும் நெடுவாழ் காட்டுக் கோழி போன்ற முக்கியமான பறவைகளை இங்கு காணலாம்.

இந்த சரணாலயத்தில் முக்கிய உள்நாட்டு தாவரங்களான பைன் வகைகள், கருவாலி, ரொடொடெண்டரன்ஸ் (rhododendrons), பைரொபைட்ஸ் (bryophytes), டெரியோடைபைட்ஸ் (pteridophytes) , தொங்கும் மோசெஸ் (hanging mosses), கஃபல் (Kaphal), பைனஸ் ராஃஸ்பர்கி (Pinus roxburghii), எங்கல்ஹர்ட்ஸியா ஸ்பிசதா (Engelhardtia spiicata),மசரங்கா புஸ்துலதா (Macaranga pustulata), குர்கஸ் கொலோகா ( Quercus gloca), குயர்கஸ் இன்கானா (Quercus incana)மற்றும் குயர்கஸ் லியோகோத்ரிகொப்பரா (Quercus leucotricophora) போன்றவற்றையும் இங்கு கண்டு ரசிக்கலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Jul,Sat
Return On
12 Jul,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Jul,Sat
Check Out
12 Jul,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Jul,Sat
Return On
12 Jul,Sun