Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அல்மோரா » ஈர்க்கும் இடங்கள் » கதர்மல் சூரியனார் கோயில்

கதர்மல் சூரியனார் கோயில், அல்மோரா

20

அல்மோராவிலிருந்து 16 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள பிரபலமான கோவில்களில் ஒன்றான கதர்மல் சூரியக் கோவில் பார்க்க வேண்டிய தலம்.  இக்கோவில் ஒரிசாவின் கோனார்க் சூரியனார் கோயிலுக்கு பின் சூரியக் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட இரண்டாவது முக்கிய சூரியக் கோவில்.

800 ஆண்டுகள் பழமையான இக்கோவிலின் முக்கிய பிரகாரத்தை சுற்றி 45 சிறிய கோயில்கள் உள்ளன. கோவில் சற்றே அழிந்திருந்தாலும் இன்றும் அல்மோராவின் முக்கிய சுற்றுலாத் தலமாக கருதப்படுகிறது.

இது பழமையான சூரியக் கடவுள்களான புர்ஹதித்தா அல்லது வரதாஹதித்யா கடவுள்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள கோவில். கோவிலின் வளாகத்தில் சிவன், பார்வதி மற்றும் லக்ஷ்மி, நாராயண சிலைகளை இங்கு வரும் பக்தர்கள் வணங்கி ஆசி பெறலாம்.

தனித்தன்மைமிக்க கட்டடக்கலையை கொண்ட இக்கோவிலின் சுவர்களில் காணப்படும் பல நுணுக்கமான உள்வேளைகள் அடங்கிய அலங்கரிக்கப்பட்ட சுவர்கள் கோவிலுக்கு கூடுதல் அழகு.

இந்த கோவில் கதர்மலா என்று அழைக்கப்படும் கத்யுரி மன்னரால் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக பதிவுகள் இருக்கின்றன. கடல் மட்டத்திலிருந்து 2116 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமையப்பெற்றுள்ளது.

சூரிய உதயத்தின் முதல் கதிர் இக்கோவிலில் உள்ள சிவ லிங்கத்தின் மீது விழும்படியாக இத்தலம் கட்டப்பட்டுள்ளது. கல்லாலான சுவர்களும் அழகிய சிற்பங்கள் தாங்கிய தூண்களும், அழகிய மரக் கதவுகளும் கோவிலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

10-ஆம் நூற்றாண்டில் இங்கு உள்ள சுவாமி சிலை திருடப்பட்டதால் இக்கோவிலின் செதுக்கப்பட்ட கதவுகளும், மரச் சட்டங்களும் தில்லியின் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Aug,Thu
Check Out
21 Aug,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri