ஆலுவா நகரில் பாய்ந்து கொண்டிருக்கும் பெரியார் நதி 229 கிலோமீட்டர் தொலைவு நீடு செல்வதால் கேரளாவின் மிகப்பெரிய நதிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த நதி தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு ஊடாக பாய்ந்து செல்வதால் அந்த மக்களின் வாழ்வு முறை, பழக்க வழக்கம், பாரம்பரியம் ஆகிவற்றில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பாதிப்புகளை உண்டாக்குகிறது.
பெரியார் நதியின் நீண்ட பரிசுத்தமான கரையோரங்களில் வரிசையாக அமைந்திருக்கும் தென்னை மற்றும் பனை மரங்களும், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என்று அனைத்தும் சேர்ந்து பெரியார் நதியை புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழச் செய்துகொண்டிருக்கின்றன. அதோடு பெரியார் நதிக்கரையில் எண்ணற்ற சிறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
பெரியார் நதி நகர வாழ்வின் பரபரப்பிலிருந்து விலகியே இருப்பதால் கவர்ச்சியும், அமைதியும் பொங்க காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இயற்கையை நேசிக்கும் அத்தனை பேரும் இங்கு சுற்றுலா வருவதற்கு ஆசைப்படுகிறார்கள்.
மேலும் பெரியார் நதியின் கிளை நதிகளான முத்திரப்புழா, முல்லையாறு, செறுதோணி, பெரிஞ்ஜான்குட்டி, இடமலா போன்ற நதிகளும் கவர்ச்சிக்கு குறையில்லாமல் வளமையுடன் பாய்ந்து கொண்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications