அல்வர் நகரத்திலுள்ள சர்ச் ரோடு எனும் சாலையில் இந்த கிளாக் டவர் அமைந்துள்ளது. தூரத்திலிருந்தே நன்கு தெரியும் வண்ணம் நான்கு முகங்கள் கொண்ட மிகப்பெரிய கடிகாரக்கூண்டு இந்த கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கடிகாரக் கோபுரத்தின் அடிப்பகுதி அற்புதமான கட்டிடக்கலை நுணுக்கங்களுடன் காட்சியளிக்கிறது. நடுப்பகுதியில் சில தேசபக்தி வாசகங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. பழைமையான இந்த மணிக்கூண்டு சந்தடி மிகுந்த சௌராஹா மற்றும் மார்க்கெட் பகுதியில் நடுவே காணப்படுகிறது. ராஜபுதன கலையம்சங்கள் இந்த சிறிய கலைச்சின்னத்திலும் அற்புதமாக மிளிர்வது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications