Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அல்வர் » ஈர்க்கும் இடங்கள் » சிட்டி பேலஸ்

சிட்டி பேலஸ், அல்வர்

22

வினய் விலாஸ் மஹால் என்றும் அழைக்கப்படுகிற இந்த சிட்டி பேலஸ் அரண்மனை அக்கால மஹாராஜாக்களின் உன்னதமான வாழ்க்கை நாகரிகத்தை எடுத்துக்காட்டும் அடையாளமாக அமைந்துள்ளது. 1793ம் ஆண்டு ராஜா பக்தவார் என்பவரால் இந்த பிரம்மாண்ட மாளிகை அமைப்பு கட்டப்பட்டுள்ளது.

மேலும், வரலாற்றின் பிரசித்தமான ஆளுமைகளுடனும் இது முக்கியத்தொடர்பை கொண்டுள்ளது. பாபர், ஜஹாங்கிர் மற்றும் மஹாராஜா பிரதாப் சிங் போன்ற ராஜபுத்திர மன்னர்கள் இந்த அரண்மனைக் கோட்டையில் தங்கி வாழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்த கம்பீரமான அரண்மனை வளாகத்தின் நடுவில் அமைந்துள்ள மையக்கூடத்தில் பளிங்குக்கற்களால் ஆன ஒரு தாமரைக்கோபுரம் காணப்படுகிறது. கலையம்சம் கொண்ட கண்ணாடி அலங்கார வேலைப்பாடுகள், சுவரோவியங்கள் மற்றும் குறு ஓவியங்களுக்கும் இந்த அரண்மனை மாளிகை புகழ் பெற்றுள்ளது.

இந்த அரண்மனையிலுள்ள கருவூலத்தில் தங்கத்தால் ஆன ஒரு வெல்வெட் சிம்மாசனம், ஒற்றை மரகதக்கல்லில் செய்யப்பட்ட ஒரு விலைமதிப்பற்ற கோப்பை ஆகியவை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள அரண்மனைக் கொட்டடியில் நான்கு யானைகள் இழுத்துச்செல்லும் ஒரு பிரமாண்டமான இரண்டு அடுக்கு ராஜ சாரட் வண்டியும் காணப்படுகிறது. தற்சமயமும் ஒரு அருங்காட்சியகமும் இந்த அரண்மனையில் அமைந்துள்ளது.

இதில் ராஜவம்சம் பயன்படுத்திய அரும் பொருட்கள், நினைவுச்சின்னங்கள், வரலாற்று சாதனங்கள், விலை மதிப்பற்ற சேகரிப்புகள் மற்றும் அரிய எழுத்துப்பிரதிகள் ஆகிய வைக்கப்பட்டுள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jul,Thu
Check Out
31 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri