அல்வர் நகரத்திலிருந்து 24 கி.மீ தூரத்தில் இந்த நால்டேஷ்வர் அமைந்துள்ளது. ரம்மியமான இந்த கிராமத்தில் தனித்தன்மை வாய்ந்த மஹாதேவ் கோயில் உள்ளது. பசுமையான சூழல் மற்றும் கண்கவரும் கூழாங்கள் மலைகள் சூழ இது காட்சியளிக்கிறது.
இக்கோயிலிலுள்ள சிவலிங்கத்தை வழிபட வருடமுழுவதும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அருகிலுள்ள மலைப்பகுதியிலிருந்து நீரைப்பெறும் இரண்டு குளங்களும் இங்கு அமைந்துள்ளன. மழைக்காலத்தில் இப்பகுதி முழுவதும் புதுப்பொலிவுடன் மிளிர்வது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.



Click it and Unblock the Notifications