சிட்டி பேலஸ் அரண்மனைக்கு பின்புறத்தில் இந்த சாகர் ஏரி அமைந்துள்ளது. இது 1815ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த ஏரி நீர்த்தேக்கம் ஒரு புனித நீராட்டுதுறையாகவும் இப்பகுதியில் பிரசித்தி பெற்றுள்ளது.
ஏரியின் கரைப்பகுதியும் ஒரு புனிதஸ்தலமாகவே கருதப்படுகிறது. இங்கு பக்தர்கள் புறாக்களுக்கு தீனி போடும் பாரம்பரிய வழக்கத்தை பின்பற்றுகின்றனர்.
பல கோயில்கள், சிறு சன்னதிகள் மற்றும் எண்ணற்ற நினைவுமாடங்களும் சாகர் ஏரியின் கரையை ஒட்டி அமைந்துள்ளன. மினுமினுக்கும் நீருடன் சுற்றிலும் பலவிதமான கம்பீர சின்னங்கள் சூழ்ந்திருக்கும் இந்த ஏரி சுற்றுலாப்பயணிகளால் பெரிதும் ரசிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications