அம்பாசமுத்திரம் நகரத்தின் கரையோரத்தில் பெருகி வழிந்தோடுகிறது தாமிரபரணி ஆறு. இந்த ஆறு மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடங்கி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக பாய்ந்தோடுகிறது.
இந்த நதி இப்பெயரை பெற காரணமாக இருந்தது தாமிரம் என்ற உலோகம் இங்கு அதிகமாக காணப்படுவதே. மேலும் இயற்கை மூலிகைகள் பலவற்றை கொண்டுள்ள பொதிகை மலைகளை கடந்து வருவதால், இந்த ஆற்றுத் தண்ணீருக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.
மிகவும் தித்திப்பாக இருக்கும் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரை ஒரு முறையாவது கண்டிப்பாக பருக வேண்டும். தாமிரம் உலோகம் கலந்திருப்பதால் இந்நீர் சிவந்த நிறத்தில் காணப்படும்.



Click it and Unblock the Notifications