அம்போலி நீர்வீழ்ச்சி ஒரு அற்புதமான சுற்றுலா ஸ்தலமாக புகழ் பெற்றுள்ளது. இது ஏராளமான சுற்றுலாப்பயணிகளை வருடமுழுவதும் ஈர்க்கின்றது. இந்த நீர்வீழ்ச்சி மழைக்காலத்தில் அபரிமிதமான நீர்ப்பெருக்குடன் அற்புதமாக காட்சியளிக்கிறது.
சுற்றுப்புறமும் பசுமை போர்த்தி காணப்படுகிறது. மழைக்காலம் இந்த நீர்வீழ்ச்சியை புகை மண்டலத்துடன் காட்சியளிக்கும் ஒரு கற்பனாலோகம் போன்று ஆக்குகிறது.ஜுன் முதல் அக்டோபர் வரையிலான காலம் இந்த நீர்வீழ்ச்சிக்கு விஜயம் செய்ய உகந்த காலமாகும்.



Click it and Unblock the Notifications