போர்களத்தில் மேக்நாத்துடன் மோதும் போது லக்ஷ்மணனுக்கு அடிபட்டதால், ஹனுமான் சஞ்சீவி மூலிகை செடிகள் நிறைந்த மலையை பெயர்த்து கையில் தூக்கி கொண்டு வந்தார் என்று ராமாயணம் கூறுகிறது.
அப்படி தூக்கி கொண்டு வருகையில் அந்த மலையின் ஒரு பகுதி அயோத்யாவில் விழுந்ததாக புராணம் கூறுகிறது. இந்த குன்றை தான் மணி பர்பாத் என்றழைக்கிறோம். இது சுக்ரீவ் பர்பாத் என்ற மற்றொரு குன்றிற்கு அருகில் உள்ளது.
மணி பர்பாத் 65 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கே பல கடவுள்களின் சிலைகள் உள்ளன. இந்த குன்றின் மேல் ஏறி நின்றால், ஒட்டு மொத்த நகரத்தின் பரப்பும் தெரியும்.
புத்தர் அயோத்யாவில் ஆறு வருடம் தங்கினார் என்று நம்பப்படுகிறது. அப்போது தன் தர்ம நீதி போதனைகளை இந்த குன்றின் மீது இருந்து தான் வழங்கினார் என்றும் நம்பப்படுகிறது.
இந்த பர்பாத்தில் அசோக சக்ரவர்த்தி எழுப்பிய ஒரு நினைவுத் தூணும் உள்ளது. இதனருகே ஒரு பழமை வாய்ந்த புத்த மத மடமும், குன்றின் அடிப்பகுதியில் ஒரு இஸ்லாமிய மயானமும் அமையப்பெற்றுள்ளன.



Click it and Unblock the Notifications