பாதாமியிலிருந்து 2 கி.மீ தொலைவில் பாறைக்குன்றின் உச்சியில் இந்த மலேகட்டி சிவாலயா எனும் கோயில் அமைந்துள்ளது. புராதனமான கற்கோயிலான இது 7 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.
சிவனின் சாந்தரூப அவதாரத்துக்கான இந்தக்கோயில் கற்பூச்சு மற்றும் கோபுரம் எதுவும் இல்லாமல் காட்சியளிக்கிறது. கீழே உள்ள சிவன் கோயிலில் திராவிட பாணி கோபுரம் கட்டப்பட்டிருந்தாலும் தற்சமயம் கருவறை மட்டுமே மிச்சமுள்ளது.
இங்கு இரண்டு குறிப்புகள் காணப்படுகின்றன. ஒன்றில் ஆர்யமிஞ்சி உபாத்யாயா எனும் சிற்பி இந்த மலேகட்டி சிவாலயத்தைக் கட்டியதாகவும், மற்றொன்றில் 1543ம் ஆண்டு விஜயநகரப் பேரரசின் ஆதிக்கத்தை சுட்டுவதாகவும் தகவல்கள் உள்ளன.
ஒரு பெரிய தானியக்கிடங்கு, இரட்டைக்கோட்டைச்சுவர், பல கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் ஒரு சுரங்க அறை போன்றவற்றை இந்த கோயில் ஸ்தலத்தில் காண முடிகிறது. பாதாமியின் கோட்டை வளாகத்துள்ளே அமைந்துள்ள இந்தக்கோயில் பயணிகள் அவசியம் காண வேண்டிய ஒரு அம்சமாகும்.



Click it and Unblock the Notifications