பூதநாத கோயில்களின் தொகுப்பில் ஒன்றான இந்த மல்லிகார்ஜுனா கோயில் இந்த தொகுப்பிலேயே பிரதானமான கோயிலாகும். அகஸ்திய ஏரியின் வடகிழக்குப்பகுதியில் அமைந்துள்ள இந்தக்கோயில் சாளுக்கிய கட்டிடக்கலை பாணியின் முக்கிய அம்சமான அடித்தள பீட அமைப்பின் மீது எழுப்பப்பட்டுள்ளது.
இந்த கோயிலில் கிடைமட்டமான அடுக்குகள், பிரமிடு வடிவ கோபுர அமைப்புகள், வேலைப்பாட்டுடன் கூடிய கல் உத்தரங்களைக்கொண்ட திறந்த மண்டபம் போன்றவை காணப்படுகின்றன. பாதாமிக்கு வருகை தரும் பயணிகள் இந்த மல்லிகார்ஜுனா கோயிலுக்கு தவறாமல் வருகை தருவது அவசியமாகும்.



Click it and Unblock the Notifications