Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாகா பீச் » ஈர்க்கும் இடங்கள் » கஃபே மாம்போஸ்

கஃபே மாம்போஸ், பாகா பீச்

19

கோவாவின் புகழ்பெற்ற கஃபே டிட்டோஸ் சாலையில், பாகா கடற்கரையில் அமைந்திருக்கும் கஃபே மாம்போஸ், சுற்றுலாப் பயணிகளிடையே வெகு பிரசித்தம். அதிலும், குறிப்பாக டிட்டோஸ் சாலையில் எத்தனையோ இரவு விடுதிகளும், பார்களும், பார்லர்களும்  இருந்தாலும் பயணிகளின் மனம் விரும்பும் நல்ல இசையையும், மிகச் சிறந்த தரத்தையும் அளிக்கும் விடுதிகளில் மாம்போஸுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு.

இந்த விடுதிக்கு இணையாக வருபவர்களுக்கு 500 ரூபாயும், தனி நபருக்கு 800 ரூபாயும் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால் இந்த கட்டணம் விடுதியின் உள்ளே நுழைவதற்கு மட்டும்தான்.

அதற்கு பிறகு நீங்கள் உள்ளே வாங்கும் பொருள் உணவு, மது என்று எதுவாக இருந்தாலும் தனியாக பணம் செலுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த விடுதியில் கடன் அட்டைகள் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. எனவே தேவையான அளவு பணத்தை நீங்கள் எடுத்து வருவது மிகவும் அவசியம்.

கஃபே மாம்போஸ் விடுதியில் காக்டெயில்களுடன் கூடிய லா கார்டே விருந்து மிகவும் பிரபலம். அதோடு இங்கு கிடைக்கும் கோவான் பன்றி இறைச்சியை போல் நீங்கள் வேறெங்கும் சாப்பிட்டிருக்க முடியாது. மேலும், மாம்போஸுக்கு உள்ளே இருந்துகொண்டே வெளியிலுள்ள துரித உணவகங்களிலிருந்து உணவை வரவழைத்து சாப்பிடலாம்.

கஃபே மாம்போஸ் விடுதியில் உணவகங்களும், நடன மேடைகளும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே உணவகங்களில் இருப்பவர்களுக்கு, நடனம் ஆடுபவர்களால் எந்த தொந்தரவும் ஏற்படாது. அதோடு விடுதியை சுற்றி எந்நேரமும் பாதுகாவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடபட்டு கொண்டிருப்பதால் எவரும் வரம்பு மீறி செயல்பட முடியாது.

கஃபே மாம்போஸ் விடுதி இருக்கும் டிட்டோஸ் சாலை சில இரவுகளில் நெரிசல் மிகுந்து காணப்படும். ஆதலால் அப்படிப்பட்ட சமயங்களில் நீங்கள் வாடகை கார்களில் வரும் போது டிட்டோஸ் சாலையின் துவக்கத்திலேயே காரை விட்டு இறங்கி மாம்போஸ் விடுதிக்கு நடந்து செல்ல வேண்டும்.

அவ்வாறு விடுதிக்கு நடந்து செல்வதும் ஒருவகையில் நல்லதுதான். ஏனெனில் நடந்து செல்லும் வழியில் உள்ள மற்ற பார்களையும் நீங்கள் பார்த்து சிறந்தவற்றை உங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri