Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாகா பீச் » ஈர்க்கும் இடங்கள் » செயின்ட் அந்தோனிஸ் கரோக்கி குடில்

செயின்ட் அந்தோனிஸ் கரோக்கி குடில், பாகா பீச்

19

பாகா கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற பிரிட்டோஸ் குடிலுக்கு அருகிலேயே செயின்ட் அந்தோனிஸ் கரோக்கி குடில் அமைந்திருக்கிறது. இந்த குடில் ஆரம்பிக்கப்பட்டு சில காலங்கள் வரை அவ்வளாக அறியப்படாமலேயே இருந்தது. ஆனால் இன்றோ இந்த குடில் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.

செயின்ட் அந்தோனிஸ் கரோக்கி குடிலில் உள்ளரங்கு மற்றும் வெளியரங்கு வசதிகள் இரண்டுமே இருக்கின்றன. இதன் உள்ளரங்குகளிருந்து கேட்கும் அறுபது, எழுபதுகளின் இசை உங்களை மெய்மறக்கச் செய்து விடும். இந்த கரோக்கி குடில் கோவாவின் பரபரப்புக்கும், வீரியத்துக்கும் சிறந்த உதாரணமாக திகழ்ந்து வருகிறது.

இங்கு கிடைக்கும் உணவுகளுக்காக உயிரையும் கொடுக்கலாம். மேலும் இதன் அருகிலுள்ள பிரிட்டோஸ் குடிலை விட இங்கு குறைந்த விலையில் மது வகைகள் கிடைக்கும். அதோடு இங்குள்ள பெரிய பெரிய பார் மேஜைகள் வசதியாக அமர்ந்து மது அருந்திக் கொண்டே இசையை ரசிக்க ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளன.

செயின்ட் அந்தோனிஸ் கரோக்கி குடிலுக்கு வாடகை கார்களின் மூலம் நீங்கள் வரும் பட்சத்தில் பிரிட்டோஸ் என்று கேட்டு இறங்கவும். ஒருவேளை நீங்கள் உங்கள் சொந்த வாகனத்தில் வந்தால் ஆங்காங்கு காணப்படும் அறிவிப்புப் பலகைகளை பார்த்து இடத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

அப்படி உங்களால் பிரிட்டோஸ் இருக்குமிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கஃபே காபி டே அல்லது டிட்டோஸ் சாலைக்கு வந்து அங்கிருந்து வடக்கு நோக்கி நடந்தால் கண்டிப்பாக நீங்கள் செயின்ட் அந்தோனிஸ் கரோக்கி குடிலை அடைந்து விட முடியும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jul,Thu
Check Out
31 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri