Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாகா பீச் » ஈர்க்கும் இடங்கள் » கஃபே டிட்டோஸ்

கஃபே டிட்டோஸ், பாகா பீச்

19

கோவாவின் பாகா கடற்கரையில் உள்ள கஃபே டிட்டோஸ் விடுதியின் தனிப்பெரும் புகழின் காரணமாக அந்த விடுதி அமைந்திருக்கும் சாலையே டிட்டோஸ் சாலை என்று அதன் பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த டிட்டோஸ் சாலையில் நீங்கள் எண்ணற்ற பார்களையும், இரவு விடுதிகளையும் பார்க்கலாம். ஆனால் அவ்வளவு பார்கள் இருந்தாலும் அவற்றுக்கு மத்தியில் ராணித் தேனி போல கம்பீரமாக காட்சியளிப்பது கஃபே டிட்டோஸ் மட்டும்தான்.

இவ்வளவு பெருமைகளை கொண்ட கஃபே டிட்டோஸ் அதன் பிரபலத்தை போலவே சற்று விலைமதிப்பு மிக்கதும் கூட. இதன் உள்ளே நுழைவதற்கு கட்டணமாக 1500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் இந்த கட்டணத்தை தவிர உள்ளே நீங்கள் எவ்வளவு மதுவருந்தினாலும் அதற்காக ஏதும் பணம் செலுத்த வேண்டாம். எனினும் சில சமயங்களில் தனிநபர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை.

கஃபே டிட்டோஸ் விடுதியின் உள்ளே நீங்கள் ஒருமுறை சென்றுவிட்டால் போதும், புத்துணர்ச்சியூட்டும் இசை, இதமான வெப்பநிலை, லா கார்டே விருந்து என்று எல்லாம் சேர்ந்து உங்களை சொக்கவைத்து விடும்.

இங்கு வழங்கப்படும் மது வகைகள் சாதாரண பிராண்டுகளாக இருந்தாலும், மதுவருந்த வரையறை ஏதுமில்லாததால் அது ஒரு குறையாக தெரியாது. மேலும் இங்கு நட்சத்திர டி.ஜேக்களை கொண்டு பாடல்கள் ஒலிபரப்பப்படுவதால் உங்களின் கொண்டாட்டம் ரெட்டிப்படைவது நிச்சயம்.

கஃபே டிட்டோஸ் விடுதியின் ஒரே குறை என்னவென்றால் இங்கு உள்ள  டிஸ்கோதேக்குக்கு செல்ல தனியாக 300 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அது ஒன்றும் பெரிய தொகை இல்லையென்றாலும், இதற்கு பயணிகளிடையே போதிய ஆதரவு இல்லை. இருப்பினும் கஃபே டிட்டோஸ் பற்றி இதுவரை யாரும் எந்த குறையும் சொன்னதில்லை.

டிட்டோஸ் சாலையில் வாரத்தின் இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். எனவே தனிமையான இடத்தை தேடி நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். மேலும் பாகா கஃபே காஃபி டே போன்ற பிரபலமான உணவகங்கள் டிட்டோஸ் சாலைக்கு வெகு அருகிலேயே இருக்கின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 May,Sat
Check Out
31 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun