Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாகா பீச் » ஈர்க்கும் இடங்கள் » காமாக்கி

காமாக்கி, பாகா பீச்

19

காமாக்கி என்ற சொல்லுக்கு கிரேக்க மொழியில் பரபரப்பு அல்லது ஆரவாரம் என்று பொருள். அதன் பெயருக்கு தகுந்தார் போலவே காமாக்கி விடுதி டிட்டோஸ் சாலையில் அமைந்திருக்கக்கூடிய இரவு விடுதிகளில் பரபரப்பு மிகுந்ததாக அறியப்படுகிறது.

இந்த உல்லாச விடுதி டிட்டோஸ் சாலையில் உள்ள மற்ற விடுதிகளை போல் அல்லாமல் சிறியதாக இருந்தாலும் இங்கு வரும் பயணிகள் கூட்டம் கஃபே டிட்டோஸ், மாம்போஸ் போன்ற புகழ்பெற்ற விடுதிகளுக்கு சவால் அளிக்கும் விதமாக உள்ளது.

டிட்டோஸ் சாலையில் உள்ள மற்ற விடுதிகளோடு ஒப்பிடுகையில் காமாக்கி விடுதியில் இருக்கும் இரண்டு வெவ்வேறு பகுதிகளும் பயணிகளுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும். இங்குள்ள உள்முற்றத்தில் காணப்படும் இரு மிகப்பெரிய எல்.சி.டி திரைகளில் நீங்கள் கிரிக்கெட், கால்பந்து, ஃபார்முலா ஒன் போன்ற விளையாட்டுகளை பார்த்து ரசிக்கலாம்.

அதோடு இதன் மற்றொரு பகுதியில் பார் டேபிள்களும், நடன மேடையும் இருக்கின்றன. இங்கு டி.ஜேக்களால் ஒலிபரப்பப்படும் டெக்னோ மற்றும் ஹிப் ஹாப் இசைத்தட்டுகள் ஆடத் தெரியாதவரையும்  ஆடவைத்து விடும்.

காமாக்கியில் தயாரிக்கப்படும் கிரேக்க உணவு வகைகளும், மற்ற கோவா கடல் உணவுகளும் பயணிகளிடையே மிகப்பிரபலம். ஒருவேளை உங்களுக்கு அந்த உணவு வகைகள் பிடிக்கவில்லை என்றால் காமாக்கியில் மது அருந்திய பின்பு அருகிலுள்ள டோமினோ'ஸ் பீசாவுக்கு சென்று இரவு உணவை முடித்துக் கொள்ளலாம். 

காமாக்கி இரவு விடுதி மாலை 6 மணியிலிருந்து, காலை 6 மணி வரைக்கும் திறந்திருக்கும். அதோடு இந்த விடுதி டிட்டோஸ் சாலையில் அமைந்திருப்பதால் கோவாவின் எந்த பகுதியிலிருந்தும் சுலபமாக காமாக்கியை அடைந்து விட முடியும்.

மேலும் காமாக்கி விடுதிக்கு வாடகை கார் அல்லது உங்களின் சொந்த வாகனம் என்று எதில் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் டிட்டோஸ் சாலை அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படும் பகுதி என்பதால் அதற்கு தகுந்தார் போல நீங்கள் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
04 Apr,Sat
Return On
05 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
04 Apr,Sat
Check Out
05 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
04 Apr,Sat
Return On
05 Apr,Sun