Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பலங்கிர் » ஈர்க்கும் இடங்கள் » ஹரிசங்கர்

ஹரிசங்கர், பலங்கிர்

16

ஹரிசங்கர், கான்தாமர்தான் மலைச் சரிவில் உள்ளது. மிகவும் அற்புதமான இயற்கை அழகுடன் விளங்கும் இந்த இடம் மிக முக்கியமான ஒரு இந்து மத  யாத்திரை ஸ்தலமாக உள்ளது. 

இங்கு ஒரு வற்றாத நீரோடை ஒன்று அமையப்பெற்றிருக்கிறது. இந்த  இடத்தில் பகவான் கிருஷ்ணருக்கு அர்பணிக்கப்பட்ட மிகப் பிரபலமான ஹரிசங்கர் கோவில் ஒன்று உள்ளது.

மேலும் இந்த வளாகத்தில், அனுமன், ஜகன்நாதர் மற்றும் ராமர் சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலின் வளாகத்தில் அமைந்துள்ள தர்மசாலா யாத்ரீகர்களுக்கு தங்கும் வசதியை வழங்குகின்றது.

ஹரி சங்கர் சிலையானது சவுகான் வம்சத்தை சார்ந்த ஒரு அரசனால் கி.பி 14 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிலையுடன் நர்த்தனமாடும் விநாயகர் சிலையும் கண்டறியப்பட்டது. இந்த இரு சிலைகளும் கி.பி. 12 ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படுகின்றன.

நரசிங்கநாத் கோயில் கான்தாமர்தான் மலையின் எதிர் பக்கத்தில் அமைந்துள்ளது. ஹரி ஷங்கர் கோவில் மற்றும் நரசிங்கநாத் கோயிலுக்கு  இடையே உள்ள  பீடபூமியில் கடந்த காலத்தை சேர்ந்த புத்த மத எச்சங்கள் காணப்படுகின்றன. இந்த எச்சங்கள் பாரிமால்கிரி பல்கலைக்கழகம் இந்த இடத்தில் இருந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றது.

நீங்கள் ஆண்டு முழுவதும் ஹரிசங்கருக்கு வருகை புரியலாம். இங்கு சுமார் 1000 மூலிகை மரங்களுக்கும் மேலே உள்ள ஒரு மூலிகைத் தோட்டம் ஒன்று உள்ளது.

ஹரிசங்கர் நன்கு பராமரிக்கப்படும் சாலைகள் மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பாலிங்கரில் இருந்து ஹரிசங்கருக்கு அடிக்கடி பேருந்து சேவைகள் உள்ளன. இது பாலங்கரில் இருந்து சுமார் 72 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 May,Sat
Check Out
31 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun