பாந்தவ்கார் தேசிய பூங்கா மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள விந்திய மலை முழுவதும் பரவியுள்ளது. இது புலிகள் மற்றும் அதன் பல்லுயிரினத்திற்கு மிகவும் பிரபலமானது.
இந்த தேசிய பூங்கா சுமார் 400 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த பூங்கா செங்குத்தான முகடுகள், மாசடையாத காடுகள் மற்றும் திறந்த புல்வெளிகளை உள்ளடக்கியது.
இந்த பூங்காவில் சில தனிமைப்படுத்தப் பட்ட இடங்கள் உள்ளன. அவைகள் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கிறது. பாந்தவ்கார் தேசிய பூங்காவில் 22 பாலூட்டி இனங்கள் மற்றும் 250 பறவை இனங்கள் உள்ளன.
இந்த சரணாலயத்திற்கு சுற்றுலா செல்லும் பொழுது நீங்கள் கண்டிப்பாக புலி, ஆசிய குள்ள நரி, கோடுகளுடைய கழுதை புலி, பெங்கால் நரி, ஸ்லோத் கரடி, காட்டுப் பூனை, மற்றும் சிறுத்தை உள்ளிட்ட பலவகையான விலங்குகளை காணலாம்.
மேலும் இங்கு பாலூட்டிகளான பாம் அணில், செந்நாய், லெஸ்ஸர் பெருச்சாளி எலி மற்றும் சிறிய இந்திய புனுகு பூனை போன்றவற்றையும் பார்க்கலாம்.
இந்த வனவிலங்கு சரணாலயத்தை பார்க்க சிறந்த வழி ஒரு ஜீப் அல்லது யானை மீது சபாரி செல்வது ஆகும். நீங்கள் சபாரி செல்வதற்கு சுற்றுலா துறையை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications