கார்புரி அணை பாந்தவ்காரின் புறநகரில் அமைந்துள்ளது. இது பாந்தவ்கார் தேசிய பூங்காவில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த அணை இதன் கட்டுமானத்திற்காக பிரபலமாக உள்ளது. அணையை சுற்றியுள்ள இடங்கள் கண்ணுக்கினிய காட்சியை வழங்குகின்றன.
ஏனெலில் அணையில் உள்ள தண்ணீருக்காக பல்வேறு வகையிலான பறவைகள் வருகின்றன. மேலும் இங்கு பல்வேறு வகையிலான மீன்கள் உள்ளன. இங்கு ஈரநிலப் பறவைகளான பிளாக் இபிஸ், ஸரஸ் கொக்குகள், எக்ரெட், பைய்ட் வேக்டைல், ரெட்-வாட்டெல்ட் லாப்விங்க், லெஸ்ஸர் அட்ஜுடண்ட் நாரை, இந்திய குள ஹெரான் மற்றும் பொதுவான மற்றும் பல வண்ணங்களால் ஆன கிங்க்பிஷ்ஷர் போன்றவைகள் காணப்படுகின்றன.
இங்கு நாம் ஆண்டு முழுவதும் பறவை ஆர்வலர்களை அவர்களுடைய விலையுர்ந்த உபகரணங்களுடன் காணலாம். கார்புரி அணை என்பது ஒரு கம்பீரமான 20 கிலோமீட்டர் நீளமுடய அணை ஆகும்.
இந்த அணை அழகான மற்றும் வண்ணமயமான பறவைகள் பற்றி பேசி மற்றும் நடப்பதற்கான ஒரு சிறந்த இடம் ஆகும். எனவே இது பாந்தவ்கார் சுற்றுலாவில் மிக முக்கியமான இடம் வகிக்கிறது.



Click it and Unblock the Notifications