பெங்களூரின் தென்பகுதியில் உள்ள பசவனகுடியில் அமைந்துள்ள என். ஆர் காலனியில் இந்த காளை கோயில் அல்லது தோட் பசவன குடி இருக்கிறது. கடவுள் அந்தஸ்து கொண்ட நந்திக்காக இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐதீக கதைகளின் படி ஆதி காலத்தில் இந்த கோயில் இருக்கும் பகுதியில் விளைந்த கடலைப்பயிரை தொடர்ந்து மேய்ந்தபடியே இருந்த ஒரு காளையை சாந்தப்படுத்த வேண்டி இந்த கோயில் கட்டப்பட்ட தாக கூறப்படுகிறது. இந்த ஐதீக கதையின் அடிப்படையில் இப்போதும் கோயிலின் அருகில் நவம்பர் டிசம்பர் மாதங்களில் ‘கடலைக்காயி பரிஷே’ எனும் கடலைக்காய் சந்தை (அறுவடைக்காலங்களில்) நடத்தப்படுகிறது. இந்த சந்தை நடக்கும் காலத்தில் காளை கோயிலுக்கு செல்வது உகந்தது.
தொட்ட கணேசா கோயிலும் இந்த காளை கோயிலுக்கு அருகிலேயே உள்ளது. பசவனகுடிக்கு செல்ல ஏராளமான பேருந்து வசதிகள் இருப்பதால் பயணிகளுக்கு இங்கு செல்வதில் சிரமம் ஏதும் இருக்காது. அரசு மற்றும் தனியார் சுற்றுலா பேருந்துகள் பசவனகுடிக்கு ஏராளம் கிடைக்கின்றன.



Click it and Unblock the Notifications