Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பெங்களூர் » ஈர்க்கும் இடங்கள் » சேஷாத்ரி ஐயர் மெமோரியல் ஹால்

சேஷாத்ரி ஐயர் மெமோரியல் ஹால், பெங்களூர்

212

1883லிருந்து 18 நீண்ட ஆண்டுகள் மைசூர் ராஜ்யத்தின் திவானாக இருந்த கே.சேஷாத்ரி ஐயரின் ஞாபகார்த்தமாக கட்டப்பட்டுள்ள இந்த நினைவுச்சின்னம், அதன் தொன்மையான ஐரோப்பிய கட்டிடக்கலை பாணிக்காக சிறப்பு முக்கியத்துவம் பெற்று பெங்களூரில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக விளங்குகிறது.

 திவானாக இருந்த காலத்தில் சேஷாத்ரி ஐயரின் திறமையான நிர்வாகத்தையும் பொறுப்பையும் பாராட்டும் வகையில் அப்போதைய ஆங்கிலேய வைசிராய் கர்சன் பிரபுவால் இது கட்டப்பட்டுள்ளது. பெங்களூர் மத்திய நிர்வாக வளாகத்திலுள்ள கப்பன் பார்க்கினுள் இந்த மெமோரியல் ஹால் அமைந்துள்ளது.

சிவப்பு நிறத்தில் தோற்றமளிக்கும் கட்டிட அமைப்பின் முன்பகுதியில் அழகான ரோஜா தோட்டம் ஒன்றும் அமைந்துள்ளது. தற்சமயம் இது ஒரு பொது நூலகமாக விளங்குகிறது. இந்த நூலகத்தில் 1830ம் ஆண்டிலிருந்து  1900 வரை உள்ள காலத்தை சேர்ந்த 2.65 லட்சம் அரிதான புத்தகங்களின் சேகரிப்பு உள்ளது. இங்கு ஒரு பிரய்லி புத்தகப்பிரிவும் உள்ளது.

திங்கள் கிழமை மூடியிருக்கும் இந்த நூலகம் மற்ற நாட்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 7.00 மணி வரை திறந்து வைக்கப்படுகிறது. இந்த தொன்மையான நினைவகம் 300 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. சுற்றிலும் பசுமையான சூழலில் சிவப்பு நிறத்தில் கலையம்சத்துடன் நிற்கும் இந்த மாளிகை கட்டிடக்கலை அழகை ரசிக்க விரும்பும் பயணிகளை மிகவும் கவர்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
02 Apr,Thu
Return On
03 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
02 Apr,Thu
Check Out
03 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
02 Apr,Thu
Return On
03 Apr,Fri