Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பெங்களூர் » ஈர்க்கும் இடங்கள் » UB நகரம்

UB நகரம், பெங்களூர்

212

16 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள UB city யு.பி நகரம் என்று அழைக்கப்படும் இது மிகப்பெரிய வணிக வளாக திட்டமாகும்(கமர்ஷியல் காம்ப்ளக்ஸ்). கர்நாடக மாநிலத்திலேயே உயரமானதாக இந்த பிரமாண்ட வணிக வளாக கட்டிட அமைப்பு எழுப்பப் பட்டுள்ளது. இந்த யு.பி சிட்டி வணிகவளாகம் பிரிகேட் தெரு மற்றும் எம். ஜி ரோடு சந்திப்பிலிருந்து 1.5 கி.மீ தூரத்தில் விட்டல் மல்லையா ரோடில் அமைந்துள்ளது.

 

இந்த வளாக கட்டமைப்பு நான்கு வானுயர்ந்த கட்டிடங்களை கொண்டுள்ளது. யு.பி டவர், கோமட், கான்பெரா மற்றும் கான்பெரா என்று அவை நவீன பாணியில் பெயரிடப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலத்திலேயே இப்படி ஒரு ஆடம்பர சொகுசு வணிக வளாகம் கட்டப்படுவது இதுவே முதல் முறை.

டாம்பீகமான சொகுசுச்சூழலில் வியாபார ஸ்தலங்களும், அலங்கரிக்கப்பட்ட வாடகை அபார்ட்மெண்டுகளும் இங்கு காணப்படுகின்றன. அதி நவீன கருவிகள் தொழில் நுட்ப சாதனங்கள் போன்றவற்றால் நிரம்பியுள்ள இந்த வளாகத்தில் முன்னணி பிராண்டுகளின் ஷோரூம்கள் நிறைந்துள்ளன.

யு.பி டவரில் அலுவலகங்களும், கோமெட் டவரில் வாடகை அபார்ட்மெண்டுகளும், கான்பெரா மற்றும் கான்கார்டு போன்றவற்றில் சில்லறை வணிக வியாபார ஷோரூம்களும் காணப்படுகின்றன. யு.பி சிட்டியில் பிரதான அம்சமாக சர்வதேச புகழ்பெற்ற ஓக்வுட் ரெசிடென்சஸ் விளங்குகிறது.மேலும் யு.பி சிட்டியில் இத்தாலியன் உணவிலிருந்து சைனீஸ் உணவு வரை பலவகை சர்வதேச உணவுவகைகள் கிடைக்கின்றன.

800 இருக்கைகளை கொண்ட பிரமாதமான ஆம்பிதியேட்டர் ஒன்றும் இந்த சிட்டியில் உள்ளது. இந்த ஆம்பிதியேட்டரில் பல கலை நிகழ்ச்சிகளையும், ஐபில் கிரிக்கெட் போட்டியின்போது  நேரடி ஒளிபரப்புக்காட்சிகளையும் காண இளைஞர்கள் பெருமளவில் கூடுகின்றனர். 

1100 கார்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதியுடன் கூடிய யு.பி சிட்டியில் கட்டிட உச்சியில் அமைந்த ஹெலிபேட் ஒன்றும் உள்ளது பிரமிப்பூட்டும் விஷயமாகும். இங்கிருந்து ஹெலிகாப்டரில் ஐந்தே நிமிடத்தில் விமான நிலையத்தை அடையலாம்.

பிரம்மாண்டமான அதி நவீன பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த யு.பி சிட்டி முதல் பார்வையிலேயே  நம்மை கிறங்க வைக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Jul,Wed
Check Out
30 Jul,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu