Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பெங்களூர் » ஈர்க்கும் இடங்கள் » வொண்டர் லா

வொண்டர் லா, பெங்களூர்

212

பெங்களூரிலிருந்து 28 கி.மீ தொலைவில் பிடதி அருகில் வீ-கார்டு குரூப் நிறுவனத்தால் நடத்தப்படும் கேளிக்கை பூங்கா வொண்டர் லாஆகும். 82 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த கேளிக்கைப்பூங்கா பெங்களூர் மைசூர் நான்கு வழிச் சாலையில் 1 மணி நேரப்பயணத்தில் அமைந்துள்ளது.

நிலம் மற்றும் நீரில் அமைந்த 53 வகையான கேளிக்கை சவாரி வகைகள் இங்கு காணப்படுகின்றன. மேலும் இந்த பூங்காவில் இசை நீரூரற்று, லேசர் ஷோ, வர்ச்சுவல் ரியலிட்டி ஷோ, எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்தக்கூடிய ஷவர்களுடன் கூடிய நடன மேடை  போன்றவையும் உள்ளன.

1000 பார்வையாளர்கள் அமரக்கூடிய கூட்ட அரங்கு, 1150 பேர் உட்காரக்கூடிய 5 ரெஸ்டாரெண்டுகள் இவற்றுடன் உடைமகளை வைப்பதற்கான 2350 லாக்கர்களும் இங்கு உள்ளன.

OHSAS 18001:2007 எனும் சர்வதேச பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றும் இரண்டு கேளிக்கை பூங்காக்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள5 நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து சுத்தம் செய்யப்பட்ட நீர் இங்கு பயன்படுத்தப்படுவது நீர் தரக்கட்டுப்பாட்டு மையத்தின் சோதனைகள் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் இங்கு வரிசையாக மரங்கள் நடப்பட்டு மழை நீர் சேகரிப்பும்  செய்யப்பட்டு நீர் தேவைகளுக்கு பயன்படுத்த்ப்படுகிறது. இங்குள்ள சவாரிகளின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி உங்கள் மனதில் சந்தேகங்கள் பயங்கள் இருந்தாலும் அவை யாவுமே இங்கு வந்து பார்க்கும்போது மறையும் அளவுக்கு வொண்டர் லாவின் பாதுகாப்பு அம்சங்கள் காணப்படுகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed