பர்ஷ்வநாதர் கோயில் என்றும் அழைக்கப்படுகிற இந்த நக்கோடா கோயில் இந்தியாவின் முக்கிய ஜைன யாத்ரிக ஸ்தலங்களில் ஒன்றாகும். இங்கு கருங்கல்லால் ஆன பர்ஷ்வநாத தீர்த்தங்கரர் சிலை காட்சியளிக்கிறது.
ஜோத்பூர் – பார்மேர் சாலையில் 1500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோயிலானது நகோர்சேன் மற்றும் வீர்சேன் என்ற இரு சகோதரர்களால் 3 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
இங்குள்ள விக்கிரகம் ஜைன ஆச்சாரியாரான ‘ஸ்தூலிபத்ரசூரி’ என்பவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், 1224ம் ஆண்டு ஆலாம்ஷாவின் படையெடுப்பின் போது ஜைன மஹாசங்கம் இந்த விக்கிரகத்தினை காளிதர் எனும் இடத்தில் ஒளித்து வைத்திருந்து பின்னர் 1373ம் ஆண்டு மறுபிரதிஷ்டை செய்துள்ளது.
ஆதியில் இந்த பர்ஷ்வநாதர் கோயில் மஹாவீரர் கோயிலாக திகழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஸ்தலத்தில் ரிஷபதேவா மற்றும் ஷாந்திநாதர் ஆகியோரின் சன்னதிகளும் இடம்பெற்றுள்ளன.



Click it and Unblock the Notifications