ஜசோல் எனுமிடத்தில், நகோடா- பலோதரா சாலையில் அமைந்துள்ள இக்கோயில் ராணி படியானி மாதா தெய்வத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது. கேத் எனுமிடத்திலிருந்த ஒரு ஜெயின் கோயிலின் கற்களை பயன்படுத்தி இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது.
அங்கிருந்து எடுத்துவரப்பட்ட பல புனிதநூற் பிரதிகளும் கூட இங்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கோயிலில் வழிபடும் பக்தர்களுக்கு ராணி படியானி மாதா தெய்வத்தின் விசேஷமான அருள் கிட்டுவதாக நம்பிக்கை நிலவுகிறது. வருடமுழுவதும் அதிக எண்ணிக்கையில் இங்கு பக்தர்கள் விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications