பேலூருக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் வீரநாராயணா அல்லது லட்சுமி நாராயணா என்று அறியப்படும் கடவுளுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்தக் கோயிலைத் தரிசிப்பது அவசியம். ஹொய்சள மன்னர்களால் கட்டப்பட்டுள்ள இந்தக்கோயில் சென்னக்கேசவ கோயிலுக்கு மேற்குப்பகுதியில் கலையம்சங்கள் நிறைந்த வெளிப்புறம் மற்றும் உட்புறங்களைக்கொண்டுள்ளது.
இந்த கோயிலின் உள்ளே 37 சிறு தளங்களைக் கொண்டுள்ள பெரிய மண்டபம் காணப்படுகிறது. அதில் எதிரெதிரே இரண்டு கர்ப்பக்கிருகங்கள் அமைந்துள்ளன.
ஒரு மேடை போன்ற உயரமான அடித்தளத்தின்மீது எழுப்பப்பட்டுள்ள இந்த கோயிலின் சுற்றுச்சுவரில் அழகிய வைணவச்சிற்பங்கள் காணப்படுகின்றன. மேற்குப்பக்கம் உள்ள வெளிச்சுவரில் விஜயநாராயணா, சென்னகேசவா, கணேஷ், சிவன், விஷ்ணு, பிரம்மா, சரஸ்வதி, பார்வதி மற்றும் பைரவர் சிற்பங்கள் காட்சியளிக்கின்றன.
இதுபோன்ற 59 பெரிய சிற்பங்களை பயணிகள் இங்கு காணலாம்.இது தவிர சௌம்யநாயகி, கப்பே சென்னிங்கராயா மற்றும் ஆண்டாள் போன்றோரின் சிறு கோயில்களும் வீரநாராயண பெருமாள் கோயில் அருகில் அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications