பளிதானா கோவில்கள், ஜெயின் சமுதாய மக்களின் புனித ஆன்மீகத் தளமாக விளங்குகிறது. ஷத்ருஞ்சயா மலை உச்சியில் 30 க்கும் மேற்பட்ட கோவில்களைக் கொண்டது.
இவை அனைத்தும் சலவைக் கற்களால் கட்டப்பட்டவை ஆகும். இவைகளில் மிகவும் பிரதானமான, முதல் தீர்த்தங்கரர் ஆதிநாதரின்(ரிஷிப்தேவா) கோவில் மலை உச்சியில் அமைந்திருக்கிறது.
மலை உச்சியில் உள்ள மற்ற கோவில்கள், கிட்ட தட்ட 900 ஆண்டுகளாக, பல காலகட்டங்களில் ஜெயின் சமுதாயத்தினரால் கட்டப்பட்டதாகும். குமர்பால், விமல்ஷா மற்றும் சம்பிரிதி ராஜா போன்றவை இங்குள்ள மிகவும் முக்கியமான கோவில்களாகும்.
வாழ்வில் ஒரு முறையாவது இந்த மலை ஏறி, கோவிலை தரிசிக்க வேண்டும் என்று ஜெயின் சமுதாயத்தினர் கருதுகின்றனர். மேலும், இந்த மலையில் பலரும் முக்தி அடைந்திருப்பதாக நம்புகின்றனர்.



Click it and Unblock the Notifications