ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மன்மோத் மலைகள் பலவிதமான புராதன பாறைக்குறிப்புகள் மற்றும் பாறைச்சிற்ப வடிவங்களை கொண்டுள்ளது. இந்த மன்மோத் மலை பீமாஷங்கர் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த பாறைச் சிற்ப வடிவமைப்புகள் பெரும்பாலும் புனித ஜோதிர்லிங்க கோயிலுடன் சம்பந்தம் உடையனவாய் காட்சியளிக்கின்றன. பூதலிங்கம் மற்றும் அம்பா-அம்பிகா குறிப்புகளும் இங்கு காணப்படுகின்றன. இங்குள்ள எல்லா பாறைச்சிற்ப வடிவமைப்புகளும் பாரம்பரிய புத்த பிரிவு சிற்பக்கலை பாணியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு அருகாமையில் உள்ள நாக்ஃபானி மற்றும் குப்த பீமாஷங்கர் போன்ற ஸ்தலங்களும் பயணிகள் பார்க்க வேண்டிய அம்சங்களாக அமைந்துள்ளன.