பீம்தாலிலுள்ள நாட்டுப்புற கலாச்சார அருங்காட்சியகம், ' லோக் ஷன்ஷ்கிருதி சத்தியகிரஹாலயா' எனப்படுகிறது. பார்வையாளர்கள் இங்கு சில விலைமதிப்பற்ற கலை பொருட்களுடன் பல அரிய புகைப்படங்களையும் காணலாம்.
பல்வேறு தொல்லியல் பொருட்கள் மற்றும் சிற்பக் கலை பொருட்கள் இங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவ்வருங்காட்சியகம் உத்தரகண்ட் மாநிலத்தின் கலாச்சாரத்தை பாதுகாப்பதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.
சுற்றுலா பயணிகள் இங்கு நாட்டுப்புற ஓவியங்கள், மரத்திலான கலைப்பொருட்கள், பழமையான ஓலைச்சுவடிகள், கடவுள் மற்றும் பெண் கடவுளர்களின் படங்கள், விவசாய கருவிகள் மற்றும் பழங்காழ உடைகளை பார்க்க முடியும்.



Click it and Unblock the Notifications